மாம்பழச்சிட்டு
| மாம்பழச்சிட்டு | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Aegithina tiphia (லின்னேயசு, 1758) |
மாம்பழச்சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது தெற்காசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும்; இதற்கு மஞ்சள் சிட்டு என்றொரு பெயரும் உண்டு.
அளவும் இயல்புகளும் [தொகு]
மாம்பழச்சிட்டின் கூப்பாடு இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் ( 14 செமீ [[2]] ). ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும்.[3] மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.
பரவல் [தொகு]
குறிப்புதவி [தொகு]
- ↑ BirdLife International (2009). "Aegithina tiphia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
- ↑ Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent - Grimmett, Carol * Tim Inskipp p.222
- ↑ மா. கிருஷ்ணன் - தமிழிணையப் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் [1]