மானிப்பாய் இந்துக் கல்லூரி
| மானிப்பாய் இந்துக் கல்லூரி | |
| மானிப்பாய் இந்துக் கல்லூரி சின்னம் | |
| அமைவிடம் | |
|---|---|
| மானிப்பாய் |
|
| தகவல் |
மானிப்பாய் இந்துக் கல்லூரி இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும்.
வரலாறு [தொகு]
1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.
பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன.
அதிபர்கள் [தொகு]
- 1910 - எஸ். வீரசுவாமிப்பிள்ளை
- 1911 - பி. சபாபதிப்பிள்ளை
- 1913 - ஜி. சிவராவ்
- 1915 - ரி. பி. ஹட்சன்
- 1916 - எம். சபாரத்னசிங்கி
- 1917 - டி. எச். ச்ரோச்செட்டே
- 1920 - எஸ். சிவபாதசுந்தரம்
- 1921 - பண்டிதர் வி. மயில்வாகனம்
- 1921 - சுவாமி விபுலானந்தர்
- 1922 - வி. வீரசிங்கம்
- 1951 - சி. நவரத்தினம்
- 1956 - கே. முத்துவேல்பிள்ளை
- 1972 - எம். பேரயிரவர்
- 1979 - எஸ். ரி. சாறி
- 1983 - எஸ். வி. மகேசவேலு
- 1990 - கேசவராஜன்
- 1999 - சண்முகநாதன்
- 2004 - கே. ஜெகநாதன்
- 2005 - கே. சிவனேஸ்வரன்
