சோமசுந்தரம் நடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோமசுந்தரம் நடேசன்


பதவியில்
1947-1972

பிறப்பு 1904
இறப்பு டிசம்பர் 21, 1985
தேசியம் இலங்கை
பயின்ற கல்விசாலை கொழும்பு றோயல் கல்லூரி
துறை வழக்கறிஞர்

சோமசுந்தரம் நடேசன் (Somasundaram Nadesan, இவ; 1904 - டிசம்பர் 21, 1986) என்பவர் இலங்கையில் பிரபலமான ஒரு வழக்கறிஞரும், மேலவை உறுப்பினரும் (செனட்டர்) ஆவார்.

1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடேசன், 1972 ஆம் ஆண்டில் செனட் சபை கலைக்கப்படும் வரையில் உறுப்பினராக இருந்த ஒரே ஒரு மேலவை உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த நடேசன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் பயின்று 1932 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். 1954 ஆம் ஆண்டில் இராணி வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வயதில் குறைந்த இலங்கையர் என்ர பெருமையையும் பெற்றார். 55 ஆண்டுகள் இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டில் வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இலங்கை குடிமுறை உரிமைகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோமசுந்தரம்_நடேசன்&oldid=1522478" இருந்து மீள்விக்கப்பட்டது