மலாவி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாவி ஏரி
ஆள்கூறுகள்12°11′S 34°22′E / 12.183°S 34.367°E / -12.183; 34.367
வகைRift lake
முதன்மை வரத்துருகுகு
முதன்மை வெளியேற்றம்ஷயர் ஆறு
வடிநில நாடுகள்மலாவி
மொசாம்பிக்
தான்சானியா
அதிகபட்ச நீளம்560 கிமீ தொடக்கம் 580
அதிகபட்ச அகலம்75 km
மேற்பரப்பளவு29,600 கிமீ
சராசரி ஆழம்292 மீ[1]
அதிகபட்ச ஆழம்706 மீ[1]
நீர்க் கனவளவு8,400 கிமீ³[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்500 மீ
Islandsலிக்கோமா மற்றும் சிசுமூலு

மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது நியாசா ஏரி, லாகோ நியாசா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். வெப்பவலய நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை லிவிங்ஸ்டன் ஏரி எனவும் அழைத்தனர்.

புவியியல்[தொகு]

மாலாவி ஏரி, 560 - 579 கிமீ நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கிமீ² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Lake Malawi". World Lakes Database. International Lake Environment Committee Foundation. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2007-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாவி_ஏரி&oldid=3566771" இலிருந்து மீள்விக்கப்பட்டது