மருத்துவ உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவ உயிரியல் (Medical biology) என்பது உயிரியல் துறையின் ஒரு பிரிவாகும். மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆய்வக நோயறிதலில் நடைமுறை போன்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பல உயிர் மருத்துவ துறைகள் மற்றும் சிறப்புப் பகுதிகள் இத்துறையில் உள்ளடங்கியுள்ளன. இத்துறையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பொதுவாக "உயிர்" என்ற முன்னொட்டைக் கொண்டு தொடங்கும்.

மருத்துவ உயிரியல் என்பது நவீன சுகாதார பராமரிப்பு மற்றும் ஆய்வக நோயறிதலின் முக்கியமான அடித்தளப் பிரிவாகும். பரந்த அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் இப்பிரிவில் உள்ளன. செயற்கை செல்லில் நோயறிதல் [1][2] முதல் செயற்கை செல்லில் கருத்தரித்தல் வரை, [3] நீர்மத் திசுவழர்ச்சி முதல் மூலக்கூறு வழிமுறை எச்.ஐ.வி வரை, புற்றுநோய் ஆய்வுக்கான மூலக்கூறு இடைவினைகள் [4] முதல் ஒற்றை உட்கரு அமிலமூல பல்லுருத் தோற்றம் முதல் முதல் மரபணு சிகிச்சை வரை அனைத்தும் மருத்துவ உயிரியலில் அடங்கும். மூலக்கூறு உயிரியலை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ உயிரியல் மூலக்கூறு மருத்துவத்தை [5] வளர்ப்பதற்கான அனைத்து சிக்கல்களையும் ஒருங்கிணைக்கிறது.

மனித மரபணு, உயிர்மக்குறிப்பு, புரோட்டியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் பெரிய அளவிலான கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு உறவுகள், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பங்கள் ஆகியன ஒருங்கிணைப்பில் இடம் பெறுகின்றன. [6]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_உயிரியல்&oldid=3155802" இலிருந்து மீள்விக்கப்பட்டது