மனோஜ் குமார் பராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் குமார் பராசு
அகிலேசு யாதவுடன் மனோஜ் குமார் பராசு
சட்டமன்ற உறுப்பினர், 18ஆவது சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
முன்னையவர்Self
தொகுதிநகினா
சட்டமன்ற உறுப்பினர், 16ஆவது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
முன்னையவர்ஓம்வதி தேவி
பின்னவர்Self
தொகுதிநகினா
சட்டமன்ற உறுப்பினர், 17ஆவது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1967 (1967-06-14) (அகவை 56)
பின்ஷாஹேட், பிஜ்னோர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்
நீலம் சிங் பராசு (தி. 1994)
பிள்ளைகள்1
வாழிடம்(s)பிஜ்னோர், உத்தரப்பிரதேசம்
தொழில்விவசாயம், அரசியல்

மனோஜ் குமார் பராசு (Manoj Kumar Paras) என்பவர் இந்திய அரசியல்வாதி உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்த இவர் உத்தரப்பிரதேசத்தின் நகினா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பராசு 1967ஆம் ஆண்டு சூன் 14ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள பின்ஷாஹேட்டில் அமர் சிங் ரவிக்கு மகனாகப் பிறந்தார். இடைநிலை வரை பள்ளிக் கல்வியினைக் கற்றுள்ளார். பராசு 17 ஏப்ரல் 1994-ல் நீலம் சிங் பராசை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்துவருகிறார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மனோஜ் குமார் பராசு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் நகினா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். சமாஜ்வாதி கட்சி அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பராசு உத்தரப்பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரை மார்ச் 9, 2014 அன்று, அகிலேஷ் யாதவ் "கட்சி விரோத நடவடிக்கைகள்" காரணமாக அமைச்சர் பதிவிலிருந்து நீக்கம் செய்தார்.[1]

2017 தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஓம்வதி தேவியை 7,967 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பராசு 26451 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யசுவந் சிங்கினைத் தோற்கடித்தார்.

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி கருத்துகள்
01 மார்ச் 2012 மார்ச் 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர்
02 2012 2014 அமைச்சர், முத்திரை மற்றும் சிவில் பாதுகாப்பு மார்ச் 2014-ல் அகிலேஷ் யாதவ் இவரை பதவியிலிருந்து நீக்கினார்.
03 மார்ச் 2017 மார்ச் 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
04 மார்ச் 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் [6]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Member Profile". Uttar Pradesh Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/18.pdf. பார்த்த நாள்: 10 November 2018. 
  2. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 10 November 2018. 
  3. "All MLAs from Assembly Constituency". Elections.in இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111000356/http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/nagina.html. பார்த்த நாள்: 10 November 2018. 
  4. "Uttar Pradesh Legislative Assembly (UPLA): Member info". www.upvidhansabhaproceedings.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 October 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Nagina Election Results 2017". www.elections.in. Archived from the original on 11 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 November 2018.
  6. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS2418.htm?ac=18
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_குமார்_பராசு&oldid=3743737" இலிருந்து மீள்விக்கப்பட்டது