மஞ்சள் புருவக் கொண்டைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Acritillas|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மஞ்சள் புருவக் கொண்டைக் குருவி
Calls
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Acritillas
இனம்:
இருசொற் பெயரீடு
Acritillas indica
(ஜெர்டன், 1839)
வேறு பெயர்கள்
  • Hypsipetes indica
  • Hypsipetes indicus
  • Iole indica
  • Trichophorus indicus

மஞ்சள் புருவக் கொண்டைக் குருவி அல்லது தங்கப் புருவக் கொண்டைக் குருவி (yellow-browed bulbul or golden-browed bulbul) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தில், பைக்னோனோடிடேயில் உள்ள பாடல் பறவை இனமாகும். இது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் புருவக் கொண்டைக் குருவியில் உடல் கீழ்ப்பகுதியில் மஞ்சள் நிறமாகவும், மேற்பகுதி ஆலிவ் மஞ்சள் நிறத்திலும், தனித்துவமான மஞ்சள் புருவத்துடனும் இருக்கும். இவை எழுப்பும் உரத்தக் குரலால் எளிதில் கண்டுபிடிக்கப்படுகின்றன, ஆனால் வனத்தில் உள்ள மரங்களில் அடியில் உள்ள இலைகளால் பார்வையில் இருந்து தப்புகின்றன. இதன் வகைப்பாடு காலப்போக்கில் மாறினாலும், இது தற்போது ஹெமிக்சசுடன் நெருங்கிய தொடர்புடைய அக்ரிட்டிலாஸ் என்ற பேரினத்தில் உள்ள ஒரே இனமாகும்.

வகைப்பாடு[தொகு]

துணையினங்கள்[தொகு]

இதில் மூன்று துணையினங்கள் தற்போது வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [2] [3]

  • A. i. icterica - ( ஸ்டிரிக்லேண்ட், 1844) மகாராட்டிரத்தின் சதாராவில் இருந்த ஒரு மாதிரியிலிருந்து கிரைனிகர் பேரினத்தில் ஒரு தனி இனமாக முதலில் இது விவரிக்கப்பட்டது. உடலின் மேல் பகுதி மிகுந்த சாம்பல் கலந்த பச்சை நிறமாகவும், மஞ்சள் நிறம் சற்று மங்கலாகவும் இருக்கும். மேலும் இது வடக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. [4]
  • A. i. indica - ( ஜெர்டன், 1839) : இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் நீலகிரி, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் காணப்படுகிறது. [4]
  • A. i. guglielmi - ( Ripley, 1946) : தென்மேற்கு இலங்கையில் காணப்படுகிறது. [4]

விளக்கம்[தொகு]

இந்த கொண்டைக் குருவி சுமார் 20 cm (7.9 அங்) நீளம் இருக்கும். கொண்டை இல்லாத இதன் மேல் தோற்றம் ஆலிவ் மஞ்சளாகவும், நெற்றியும் கண்ணின் மேற் புருவமும் நல்ல மஞ்சளாகவும் உடலின் கீழ்ப்பகுதி எலுமிண்ணை மஞ்சளாகவும் இருக்கும். பால் ஈருருமை இல்லை. அலகு கருப்பாகவும், விழிப்படலம் செம்பழுப்பாகவும் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் வடக்குப் பகுதியில் உள்ள பறவைகள் (ssp. icterica ) தெற்கே உள்ள பறவைகளை விட வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது (ssp. indica ). கிழக்குத் தொடர்ச்சி மலையில் சற்றே பிரிந்த பறவைகள் காணப்படுகின்றன. தென்மேற்கு இலங்கையில் உள்ள பறவைகள் (ssp. gugliemi ) பசுமையானது அதே சமயம் வடக்கில் பரிந்துரைக்கப்பட்ட துணையினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏ. ஐ. சிங்கராஜாவுக்கு அருகில் உள்ள குக்லியெல்மியின் அடிப்பகுதி பச்சை நிறத்தைக் காட்டுகிறது

இது தெளிவான மென்மையான இரட்டையசைக் குரலில் கத்தும்.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

மஞ்சள் புருவக் கொண்டைக் குருவியானது வறண்ட பகுதிகளில் வாழும் வெண்புருவ கொண்டைக் குருவிக்கு பதிலாக மழை மிகுந்த பசுங்காடுகளில் வாழும் பறவையாக கருதப்படுகிறது. இது முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையில் உள்ள மலை காடுகள், தோட்டங்களின் வனக் கூரைக்கு கீழே காணப்படுகிறது. இது கொல்லி மலை, [5] நல்லமலை, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி மற்றும் மாமண்டூர் பகுதிகள் உள்ளிட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது. [6] [7]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

மஞ்சள் புருவ கொண்டைக் குருவி இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றது. மிகுந்த ஒலி எழுப்புவதாகவும் உள்ளது. இது முதன்மையாக பழங்களையும், பூச்சிகளையும் உணவாக கொள்கிறது. இதன் இனப்பெருக்க காலம் பருவமழைக்கு முன்பு, குறிப்பாக சனவரி முதல் மே வரையிலான வறண்ட காலநிலை ஆகும். காடுகளின் நடுவில் புதரில் தரையிலிருந்து ஓரிரு மீட்டர் உயரத்தில் கோப்பை வடிவில் கூடமைக்கும். [4] கூடானது புல், இலைகளால் வெளியில் பாசியாலும், சிலந்தி வலைகளால் மூடப்பட்டிருக்கும், இதன் கூடு கண்ணாடிக் குருவியின் கூடு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. [8] இந்தியாவில் வாழ்பவை வழக்கமாக மூன்று முட்டைகளையும், இலங்கையில் இரண்டு முட்டைகளையும் இடுகின்றன. இந்தியாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் 153 கூடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92% கூடுகளில் இரண்டு முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. [9] கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் உச்சகட்ட இனப்பெருக்கம் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடப்பது கண்டறியப்பட்டது. [9] கூடு கட்டுவதற்கு சுமார் ஒரு வாரகாலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முட்டைகள் சுமார் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படுகிறது. முட்டைகள் வெளிர் இளஞ்சிவப்பாக அல்லது வெள்ளை நிறத்தில் சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும். [10] முட்டைகள் ஒரே நேரத்தில் குஞ்சு பொரிக்கின்றன மேலும் குஞ்சுகள் சுமார் 13 நாட்களுக்குப் பிறகு கூட்டிலிருந்து வெளியேறுகின்றன. [9] குஞ்சுகளுக்கு கம்பளிப்பூச்சிகள், மென்மையான பூச்சிகள், பெர்ரிகள் போன்றவை உணவாக தரப்படுகின்றன. [4]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acritillas indica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. BirdLife International (2016). "Acritillas indica". IUCN Red List of Threatened Species 2016: e.T22713173A94363317. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713173A94363317.en. https://www.iucnredlist.org/species/22713173/94363317. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Bulbuls « IOC World Bird List".
  3. Check-list of birds of the World. Volume IX.. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1960. பக். 289–290. https://archive.org/stream/checklistofbirds91960pete#page/289/mode/1up. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Ali, S; Ripley, SD (1996). Handbook of the Birds of India and Pakistan. Volume 6 (2 ). New Delhi: Oxford University Press. பக். 104–107. 
  5. Karthikeyan, S (1997). "Yellowbrowed Bulbul Hypsipetes indicus (Jerdon) in the Kolli Hills (Tamil Nadu), Eastern Ghats". J. Bombay Nat. Hist. Soc. 94 (3): 570–571. https://www.biodiversitylibrary.org/page/48601948. 
  6. Srinivasulu, C; Rao, V Vasudeva (2000). "Occurrence of the Yellowbrowed Bulbul Hypsipetes indicus (Jerdon) in the Nalamalla Hills, Andhra Pradesh". J. Bombay Nat. Hist. Soc. 97 (1): 144–145. https://www.biodiversitylibrary.org/page/48567570. 
  7. Santharam, V (1991). "Yellowbrowed Bulbul Hypsipetes indicus (Jerdon) in the Eastern Ghats". J. Bombay Nat. Hist. Soc. 88 (2): 287–288. https://www.biodiversitylibrary.org/page/48673709. 
  8. Rasmussen, PC (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. பக். 341–342. Rasmussen, PC & Anderton, JC (2005).
  9. 9.0 9.1 9.2 Balakrishnan, Peroth (2009). "Breeding ecology and nest-site selection of yellow-browed bulbul Iole indica in Western Ghats, India". J. Bombay Nat. Hist. Soc. 106 (2): 176–183. https://biodiversitylibrary.org/page/48379183. 
  10. Baker, EC Stuart (1922). The Fauna of British India, Including Ceylon and Burma. Volume 1. பக். 405–406. https://archive.org/stream/faunaofbritishin01bake#page/405/mode/1up.