மகுடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பாட்டிகள் பயன்படுத்தும் ஒரு மரபுவழி இசைக்கருவி இதுவாகும். இது துளைக்கருவிகள் அல்லது காற்றுக்கருவிகள் வகையைச் சேர்ந்தது.
[தொகு] வரலாறு
மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [1]
[தொகு] கருவி அமைப்பு
உலர்ந்த நாடங்காய் (bottle gourd) இதற்குப் பயன்படும். நாடங்காயின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் மூங்கில் குழல்கள் பொருத்தப்படும். இசையை ஏற்படுத்தக் கூடியவாறு ஏழு துளைகள் வரை குழலில் இடப்படும். இடைவெளிகள் தேன்மெழுகு மூலம் காற்றிறுக்கமாக மூடப்படும்.[1]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 Chhau, Mahakali pyakhan and Yakshagana. Dance and Music in South Asian Drama. Tokyo, Japan: The Japan Foundation 1983.
| தொகு | தமிழிசைக் கருவிகள் |
|---|---|
| மேளங்கள் | உறுமி மேளம் | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை
|
| நரம்புக் கருவிகள் | வீணை | யாழ்
|
| ஊதல் கருவிகள் | நாதஸ்வரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி
|
| தட்டு கருவிகள் | சேகண்டி | கஞ்சிரா
|