மகரிசி பத்ரயான் வியாசு சம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரவச் சான்றிதழ் (Certificate of Honour) மற்றும் மகரிசி பத்ரயான் வியாசு சம்மன் (Maharshi Badrayan Vyas Samman) என்பது இந்திய குடியரசுத் தலைவரால் ஆண்டுக்கு ஒருமுறை ஆகத்து 15 இந்திய விடுதலை நாளன்று கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும். இதில் அரபு, கன்னடம், சமசுகிருதம், மலையாளம், ஒரியா, பாளி, பாரசீகம், பிராகிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழித் துறைகளில் பங்களிப்போர்ரை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது.

இவ்விருதுகள் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை மொழி பிரிவின் கீழ் வருகிறது. பிரம்மசூத்திரத்தை எழுதிய பாதராயணர் பெயரால் இவ்விருது உள்ளது.

அறிமுக ஆண்டுகள்[தொகு]

அரபு, பாரசீக, சமசுகிருத மொழிகளுக்கான கௌரவ சான்றிதழ் 1958 இல் அறிமுகப்படுத்தியது, பாளி, பிராகிருத மொழிகளுக்கான சான்றிதழ் 1966 இல் அறிமுகப்படுத்தியது.

மகரிசி பத்ரயான் வியாசு சம்மன் விருது அரபு பாரசீகம் மற்றும் சமசுகிருதம், பாலி, பிராகிருத மொழிகளுக்காக 2002 இல் அறிமுகப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு முதல் கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு உள்ளிட்ட செம்மொழிகளின் மொழி அறிஞர்களுக்கு கெளரவ சான்றிதழ் மற்றும் மகரிசி பத்ரயான் வியாசு சம்மன் ஆகிய இரண்டும் வழங்கப்படுகின்றன.

வயது அளவுகோல் மற்றும் விருதின் உள்ளடக்கம்[தொகு]

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களுக்கு கௌரவச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது ஒரு சான்றிதழ், நினைவுப் பரிசாக ஒரு முறை ஐந்து இலட்சம் ரூபாய் கொடுக்கிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு அறிஞர்களுக்கு கௌரவச் சான்றிதழ்-ii வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒரு சான்றிதழும் ஒரு முறை நினைவு பரிசாக ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்களைக் கொடுக்கிறது.

மகரிசி பத்ரயான் வியாசு சம்மன் 30 மற்றும் 45 வயதுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கௌரவச் சான்றிதழும், நினைவு பரிசாக ஒரு லட்சம் இந்திய ரூபாய் கொடுக்கிறது. [1] [2]

செம்மொழித் தமிழ் விருதுகள்[தொகு]

தமிழ் மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசுத் தலைவரால் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகிறது. இது 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது, இந்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் மொழி பிரிவின் கீழுள்ள மொழியாய்வு நிறுவனமாகிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால்

செம்மொழித் தமிழுக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசுத் தலைவரால் தனித்தனியாக வழங்கப்படுகிறது. இது 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் மொழிப் பிரிவின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு சில வேறுபாடுகள் உள்ளன:

  1. தொல்காப்பியர் விருது (கௌரவ சான்றிதழ்-i சமம்)
  2. குறள் பீடம் விருது (கௌரவ சான்றிதழ்-ii சமம்)
  3. இளம் அறிஞர் விருது (மகரிசி பத்ரயான் வியாசு சம்மனுக்கு சமம் - வயது வரம்பு: 30–40 வயது)

பெற்றவர்கள்[தொகு]

கௌரவச் சான்றிதழ்[தொகு]

2019[தொகு]

சமசுகிருதம்[தொகு]

  • ஸ்ரீபாத சத்தியநாராயணமூர்த்தி
  • இராசேந்திர நாத் சர்மா
  • இராம்சி தாக்கூர்
  • சந்த் கிரண் சலுஜா
  • ஸ்ரீகிருஷ்ண சர்மா
  • வி. இராமகிருஷ்ண பட்
  • வித்வான் ஜனார்த்தன ஹெக்டே
  • கலா ஆச்சார்யா
  • ஹரேகிருஷ்ண சதபதி
  • பண்டிட் சத்ய தேவ் சர்மா
  • ஸ்ரீ பன்வாரி லால் கவுர்
  • வி. எஸ். கருணாகரன்
  • யுகல் கிஷோர் மிஸ்ரா
  • மனுதேவ் பட்டாச்சார்யா
  • சுபுத்தி சரண் கோஸ்வாமி

பாளி[தொகு]

  • உமா சங்கர் வியாஸ்

பிராகிருதம்[தொகு]

  • கமல் சந்த் சோகானி

அரபு[தொகு]

  • பைசானுல்லா பாஃரூக்கி
  • முகமது இக்பால் உசேன்
  • முகமது சமியுல்லா கான்

பாரசீகம்[தொகு]

  • ஈராக் ராசா ஜைதி
  • சந்தர் சேகர்
  • முகமது சித்திக் நியாஸ்மந்த்

கன்னடம்[தொகு]

  • ஹம்பா நாகராஜையா

தெலுங்கு[தொகு]

  • ரவ்வா ஸ்ரீஹரி

மலையாளம்[தொகு]

  • சி. பி அச்சுதன் உண்ணி

ஒடியா[தொகு]

  • அந்தர்யாமி மிஸ்ரா

மகரிசி பத்ரயான் வியாசு சம்மன்[தொகு]

2012[தொகு]

சமஸ்கிருதம்[தொகு]

  • சம்பதானந்த மிஸ்ரா [3]
  • சந்திர பூஷன் ஜா
  • மலிகார் அரவிந்த் குல்கர்னி
  • நாராயண் தாஷ்
  • சசிபூஷன் மிஸ்ரா

பாரசீகம்[தொகு]

  • அசாத் அலி குர்சித்

2013[தொகு]

சமசுகிருதம்[தொகு]

  • பல்ராம் சுக்லா [4]

2019[தொகு]

சமசுகிருதம்[தொகு]

  • அசோக் தப்லியாள்
  • சுஜாதா திரிபாதி
  • சஞ்சு மிஸ்ரா
  • அபிஜித் ஹன்மந்த் ஜோசி
  • சரச்சந்திர த்விவேதி

பாளி[தொகு]

  • திருமதி அனோமா ஸ்ரீராம் சகாரே

பிராகிருதம்[தொகு]

  • ஆசிசு குமார் ஜெயின்

அரபு[தொகு]

  • பௌஃசான் அகமத்

பாரசீகம்[தொகு]

  • எம். சாபாஸ் ஆலம்

கன்னடம்[தொகு]

  • ஜி. பி அரிசா
  • எஸ். கார்த்திக்
  • எம். பைரப்பா [5]

தெலுங்கு[தொகு]

  • அதங்கி ஸ்ரீனிவாசு
  • வி. திரிவேணி
  • டி. கே. பிரபாகர்

மலையாளம்[தொகு]

  • ராஜீவ் ஆர். ஆர்
  • சந்தோசு தோட்டிங்ஙல்

ஒடியா[தொகு]

  • சுப்ரத் குமார் பிரஸ்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanskrit scholar to get Badrayan award". 2 September 2015. https://www.thehindu.com/news/cities/puducherry/sanskrit-scholar-to-get-badrayan-award/article7610298.ece. 
  2. "President Awards the Certificate of Honour and Maharshi Badrayan Vyas Samman for the Year 2018". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-19.
  3. "23 scholars named for President's Award" (in en-IN). The Hindu. 2009-08-16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/23-scholars-named-for-Presidentrsquos-Award/article16875197.ece. 
  4. Vaartavali: Sanskrit News Magazine.
  5. "President Awards the Certificate of Honour and Maharshi Badrayan Vyas Samman for the Year 2019". Press Information Bureo of India. 15 August 2019. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=192658.