பாதராயணர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதராயணர் பிரம்ம சூத்திரம் என்ற வேதாந்த சூத்திரங்கள் இயற்றிய ஆசிரியர்.
உபநிஷத்களுக்கு விளக்கமாகவும் பிரம்மத்தை அடையும் வழியாகவும் இந்த சூத்திரங்களை இயற்றி கி.மு. இந்தியாவில் பெரும் பிரபலம் பெற்றவர். இவர் ஜைமினி என்ற மீமாம்ச சூத்திரங்கள்-இன் ஆசிரியர் இருந்த காலத்தில் வாழ்ந்தத்டாகவும் தெரிகிறது.
இவர் வேதாந்தம் (உத்தர மீமாம்சை) மட்டுமல்லாது பூர்வ மீமாம்சை பற்றியும் தன கருத்துக்களை தெரிவித்ததாக ஜைமினி தம் நூலில் கூறுகிறார்.