போகர்
போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் சீனர் என்று சிலரும் தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலரும் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] பழநி முருகன் சிலை
பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை.
[தொகு] போகர் நூல்கள்
போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
- போகர் 12000
- சப்த காண்டம் 7000
- நிகண்டு 1700
- வைத்தியம் 1000
- சரக்குவைப்பு 800
- செனன சாகரம் 550
- கற்பம் 360
- உபதேசம் 150
- இரணவாகமம் 100
- ஞானசாராம்சம் 100
- கற்ப சூத்திரம் 54
- வைத்திய சூத்திரம் 77
- முப்பு சூத்திரம் 51
- ஞான சூத்திரம் 37
- அட்டாங்க யோகம் 24
- பூசா விதி 20
- போகர் 7000
[தொகு] ஊடகங்களில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாமிருக்க பயமேன் எனும் தொடர் போகர் மற்றொரு நவபாடாணச் சிலையை செய்ததாகவும் அச்சிலை மண்ணில் எங்கோ புதைந்திருப்பதாகவும் இரு குழுக்கள் அச்சிலையைத் தேடுகின்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
[தொகு] உசாத்துணை
- சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
- சித்தர்கள் இராச்சியம்