பொட்டாசியம் ஓசோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஓசோனைடு
இனங்காட்டிகள்
12030-89-6
InChI
  • InChI=1S/K.HO3/c;1-3-2/h;1H/q+1;/p-1
    Key: VQZSGFOWLNUPQM-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [K+].[O-]O[O]
பண்புகள்
அடர்த்தி 1.990 கி/செ.மீ3[1]
கட்டமைப்பு
புறவெளித் தொகுதி I4/mcm
Lattice constant a = 8.597 Å, c = 7.080 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் புளோரைடு
பொட்டாசியம் குளோரைடு
பொட்டாசியம் புரோமைடு
பொட்டாசியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஓசோனைடு
உருபீடியம் ஓசோனைடு
சீசியம் ஓசோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் ஓசோனைடு (Potassium ozonide) KO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். ஆக்சிசன் மிகுதியாக உள்ள பொட்டாசியம் சேர்மமாக காணப்படும் இதில் பொட்டாசியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்கியுள்ளன. நீர்ம அமோனியாவில் பொட்டாசியம் ஓசோனைடு கரைகிறது.[2] முனைவாக்கப்பட்ட ஒளியில் இச்சேர்மம் பல்திசை வண்ணப்படிகப் பண்பை வெளிப்படுத்துகிறது.[3]

பொட்டாசியம் ஓசோனைடு சேர்மமானது 3.0 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்ட ஒரு மின்காப்பி என்று கலப்பின செயல்பாட்டுக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது கியூரி-வெயிசு விதியிலிருந்து புறப்படும் காந்த நடத்தையைக் கொண்டதாகும்.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் ஐதராக்சைடுடன் ஓசோனைச் சேர்த்துவினைபுரியச் செய்தால் பொட்டாசியம் ஓசோனைடைத் தயாரிக்க முடியும். ஆனால் விளைபொருள் மிகக்குறைவான அளவிலேயே கிடைக்கும். அதிலும் குறிப்பாக 5-10 சதவீத உற்பத்திக்கே வாய்ப்பு உள்ளது.[4]

6KOH + 4O3 -> 4KO3 + 2KOH (H2O) + O2

பண்புகள்[தொகு]

பொட்டாசியம் ஓசோனைடு சிற்றுறுதி நிலைத்தன்மை கொண்ட சேர்மமாகும். வளிமண்டலத்தில் ஏதேனும் நீர் துகள்கள் காணப்பட்டாலும் இது பொட்டாசியம் சூப்பர் ஆக்சைடாகவும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது. மிக உலர்ந்த வறண்ட வளிமண்டல சூழலில் கிட்டத்தட்ட சுழியம் பாகை செல்சியசு வெப்பநிலையில் இதை நீண்டகாலம் சேமிக்க இயலும்.[5]

KO3 -> KO2 + 1/2 O2

மேற்கோள்கள்[தொகு]

  1. Sokol, V. I.; Tokareva, S. A.; Sokovnin, E. I. (1963). "Determination of density and index of refraction of ozonides of sodium and potassium". Bulletin of the Academy of Sciences, USSR Division of Chemical Science (Springer Science and Business Media LLC) 12 (12): 2051–2052. doi:10.1007/bf00844013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  2. Makarov, S. Z.; Sokovnin, E. I. (1961). "О РАСТВОРИМОСТИ ОЗОНИДА КАЛИЯ В СЖИЖЕННОМ АММИАКЕ" (in ru). Proceedings of the USSR Academy of Sciences 137 (3): 612-613. http://mi.mathnet.ru/dan24783.  English translation
  3. Llunell, Miquel; Alemany, Pere; Moreira, Ibério de P. R. (2009-05-22). "Electronic Structure and Magnetic Properties of Potassium Ozonide KO3". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 48 (13): 5938–5945. doi:10.1021/ic900287h. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:19463009. 
  4. A. W. Petrocelli and A. Capotosto (November 1964). The Synthesis and Utilization of Low Molecular Weight Ozonides for Air Revitalization Purposes (Report). Washignton DC: National Aeronautics and Space Administration.
  5. Petrocelli, W.; Capotosto, A. (1971). "Concerning the thermal stability of potassium ozonide". Inorganica Chimica Acta (Elsevier BV) 5: 453–456. doi:10.1016/s0020-1693(00)95963-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_ஓசோனைடு&oldid=3318590" இலிருந்து மீள்விக்கப்பட்டது