பேர்லின் சுவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்லின் சுவர் (Berlin Wall) (ஜெர்மன்: Berliner Mauer, ரஷ்ய மொழி: Берли́нская стена́), என்பது கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும் சுவர் ஆகும்.
பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி ஆகஸ்ட் 13 1961 அன்று ஆரம்பித்தது. இச்சுவ பனிப்போரின் இறுதியில் 1989 இல் முற்றாக இடிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இச்சுவரைத் தாண்டி ஜெர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[1]
பனிப்போரின் இறுதியில் உள்நாட்டுக் குழப்பங்களின் உச்சக்கட்டத்தில் கிழக்கு ஜேர்மனி அரசு நவம்பர் 9, 1989 இல் மேற்கிற்குள் செல்வதற்கு மக்களை அனுமதிப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு ஜேர்மனியினர் இவர்களை மற்றையா பக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில கிழமைகளில் சுவர் இடிக்கப்பட்டது.
பேர்லின் சுவரின் வீழ்ச்சி ஜேர்மனி இரண்டும் இணைவதற்கு அத்திவாரமாக அமைந்தது. இவை அக்டோபர் 3, 1990 இல் இணைந்தன.
[தொகு] வெளி இணைப்புகள்
- பேர்லின் சுவர் - (ஆங்கிலத்தில்)
- பேர்லினில் நட்பு நாடுகளின் படைகள் - (ஆங்கிலத்தில்)
- சுவர் இடிப்பு படங்கள்

