பேரரசப் பென்குயின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேரரசப் பென்குயின் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண்டார்க்டிக்காவின் சுனோ ஹில் தீவில் வளர்ந்த பென்குயின்களும் குஞ்சும்
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Aptenodytes forsteri Gray, 1844 |
||||||||||||||
| பேரரசப் பென்குயின்களின் பரவல் (இனம் பெருக்கும் இடங்கள் - பச்சையில்) |
||||||||||||||
பேரரசப் பென்குயின் என்பதே உலகிலுள்ள பென்குயின்கள் யாவற்றினும் உயரமானதும் எடையுள்ளதும் ஆகும். இவை அண்டார்க்டிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. மற்ற பென்குயின்களைப் போலவே இவற்றாலும் பறக்கவியலாது. ஆண், பெண் பென்குயின்கள் அளவிலும் தோற்றத்திலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். இவற்றின் உயரம் 48 அங்குலம் வரையும் எடை 22 முதல் 45 கிலோகிராம் வரையும் இருக்கும். இவற்றின் தலை, முதுகுப் பகுதிகள் கருப்பாகவும் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மார்புப் பகுதி வெளிர்மஞ்சள் நிறத்திலும் காது மடலருகே நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இவற்றின் இறக்கைப் பகுதி கடல் வாழ்க்கைக்கு ஏற்ப துடுப்பு போல் இருக்கும். மீன் இவற்றின் முதன்மையான உணவு.