பேச்சு:மண்ணெண்ணெய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமான எரிபொருளாக மண்ணெண்ணெய் பாவிக்கப்படுவது சரியான் தகவலா?--Umapathy 06:45, 2 ஏப்ரல் 2007 (UTC)

ஆம் சரியாகத்தான் இருக்கவேண்டும் ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. --Umapathy 12:27, 2 ஏப்ரல் 2007 (UTC)

இது மண்ணெண்ணெய் என்று தானே இருக்கவேண்டும். தலைப்பு இலங்கை வழக்கோ ? வினோத் 02:21, 4 டிசம்பர் 2007 (UTC)

மண்ணெண்ணெய் தான் ஈழத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணெய் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே பொதுவான மண்ணெண்ணெய் முதன்மைப்படுத்தலாம்.--Kanags 06:59, 4 டிசம்பர் 2007 (UTC)

(மயூரநாதன் விளக்கியபடி) பிசுபிசுப்புத் தன்மையுடைய நீர்மங்களின் பொதுப்பெயர் நெய் என்று இருந்தது. எள் + நெய் = எண்ணெய் ஆனது. இப்போது பொது வழக்கில் எல்லா நெய்களுமே எண்ணெய் என்றும் பாலிலிருந்து பெறப்படும் நெய் மட்டுமே நெய் என்றும் ஆகிவிட்டது.
இங்கு பொதுவழக்கைப் பின்பற்றி மண்ணெண்ணை அல்லது மண்ணெண்ணெய் என்று பயன்படுத்தலாம். மண்ணெய் என்பதை வரலாற்றுக் காரணங்களுக்காகக் கட்டுரையில் குறிப்பிடலாம், வழிமாற்றும் தரலாம். -- Sundar \பேச்சு 07:06, 4 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்ணெண்ணெய்&oldid=191934" இலிருந்து மீள்விக்கப்பட்டது