பேச்சு:பாரை (மீன் குடும்பம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Carangoides malabaricus என்பதற்குத் தமிழ்ப்பெயர்கள் உள்ளன:தூளம் பாரை, தொல்லம் பாரை , (Tollam-Parah). பாரை என்னும் பெயரில் மிகப்பல மீன்கள் உள்ளன. தெலுங்கிலும் இதன் பெயர் பாரா. மராத்தி, குசராத்தி மொழிகளில் 'பங்கடா சான்றுகோள்:http://zipcodezoo.com/Animals/C/Carangoides_malabaricus/ உலகில் அதிகமான எண்ணிக்கையில் மீன்களின் பெயர்களை நெடுங்காலமாக கொண்டிருக்கும் மிகச் சில மொழிகளுள் தமிழ்மொழி ஒன்று. இந்திய மொழிகள் எதிலும் இத்தனை பெயர்கள் இல்லை (இந்தியாவில் கடற்கரையின் நீளம் மிக அதிகம் இருந்தபோதிலும் - மலையாளத்திலோ, வங்க மொழியிலோ, மராத்தி, ஒரியா மொழிகளிலோ தமிழில் இருப்பது போல் இல்லை). --செல்வா 17:18, 5 மார்ச் 2009 (UTC)

மேலும் Alectis_ciliaris என்பதற்குப் பெரும் பாரை என்று பெயர். பார்க்கவும்: http://zipcodezoo.com/Animals/A/Alectis_ciliaris/ --செல்வா 17:25, 5 மார்ச் 2009 (UTC)

மீன்களுக்கான தமிழ்ப் பெயர்களும் அவற்றுக்கு நிகரான அறிவியல் பெயரும் தெரிந்தால் அத் தமிழ்ப் பெயர்களையே கட்டுரைகளுக்குத் தலைப்பாக வைக்கலாம். முதலில் அத்தகைய பட்டியல் ஒன்றை உருவாக்க முயலலாம். மயூரநாதன் 17:54, 5 மார்ச் 2009 (UTC)

  • சிப்கோ'ட்*சூ (zipcodezoo) என்னும் தளத்தில் இணையான தமிழ்ப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Wealth of Inida என்று ஒரு நூல் வரிசை ஒன்று பிரித்தானியர் இந்தியாவை ஆண்ட நாட்களில் இருந்து பல பதிப்புகளாக வந்துள்ளன. அவற்றுள் மீன்களுக்கு என்று ஒரு தனி தொகுதி வெளி வந்தது. அதில் அறிவியற்பெயர்களும் அதற்கான இந்திய மொழிப் பெயர்களும் உள்ளன (இந் நூல் தற்பொழுது நான் பார்க்கும் வசதி இல்லை). அவற்றுள் பார்த்தீர்களானால், ஏறத்தாழ எல்லா மீன்களுக்கும் தமிழில் சொற்கள் இருக்கும் (பல இடங்களில் ஒன்றுக்கும் மேலான சொற்கள்). ஆனால் பிற இந்திய மொழிகளில் மிக சிலவற்றுக்குத்தான் பெயர்கள் உள்ளன. நான் தமிழ் பற்றி மேலே கூறியதற்கு இதுவே அடிப்படையான சான்று. தமிழில் இன்னும் தொகுக்காமல் ஏராளமான சொற்கள் உள்ளன. "தற்கால" அகராதி என்று கூறும் அகராதிகளில் ( "க்ரியா") மக்களிடையே இன்று வழங்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் (மீன் சொற்கள் முதற்கொண்டு) விடுபட்டுள்ளன. பாரை என்று எத்தனையோ மீன்கள் உள்ளன, ஆனால் பாரை என்னும் சொல்லைச் சுட்ட வில்லை. நெத்திலி, வங்கடை, குத்தா, குதுப்பு என்று எத்தனையோ மீன்களின் பெயர்கள் "க்ரியா" போன்ற அகராதிகளில் கிடையாது. தமிழின் செல்வம் சரிபாதிக்கும் மேலாக மறைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, பொருட்படுத்தப்படாமல் இருக்கின்றது. வேலியே பயிரை மேய்வது போல, அகராதி எழுதுவர்கள், மொழிநலம் பேண வேண்டுபவர்கள் அவர்களே பெரும் தவறுகள் செய்துள்ளார்கள். மெய்யெழுத்தில் தொடங்கி பெயர் சுட்டி இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான சொற்களை சேர்க்கத் தவறி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மீன்களின் பெயர்கள் விடுபட்டும் போதிய அளவு போற்றிப் பதிவு செய்யாமலும் இருப்பதெல்லாம் மிக மனவருத்தம் தருகின்றது. --செல்வா 18:19, 5 மார்ச் 2009 (UTC)

ஆம், தமிழ்நாடும் ஈழமும் நெடிய கடற்கரையைக் கொண்டிருக்கையில் மீன்களுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கி வந்துள்ளன. ஒரு குறிப்பிற்காக கீழே எனக்குத் தெரிந்தவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன். (எழுத்துப்பிழைகள் இருக்கலாம்.)

நன்னீர் மீன்கள்
  • கெண்டை (பறக்கும் கெண்டை, சிலேபிக் கெண்டை, போன்ற உள்வகைகள் எங்களைப் போன்ற தேராத மீன்பிடி சிறுவர்களிடையே சோழவந்தானில் வழங்கி வந்தன. இப்பெயரிடலுக்கும் இலின்னேயியசின் முறைக்கும் பெரிய வேறுபாடில்லை என்பது என் துணிபு. ;)
  • கெளுத்தி
  • ஆரா (RayEel fish போன்ற சில உடலமைப்பைக் கொண்டது)
  • குரவை (மீசை இருக்கும், கருத்திருக்கும், cat fish போன்று இருபக்க முள் இராது)
    • மணிக்குரவை
  • கெளிறு (cat fish? நுரையீரலோ வேறு வசதியோ கொண்டது, பல மணிநேரம் நீருக்கு வெளியில் உயிருடன் இருக்கும், குரவை போன்றே இருக்கும் முகத்தில் இருபுறமும் ஒவ்வொரு முள் நீட்டிக் கொண்டிருக்கும்)
  • அயிரை (சிறிய மீன், ஆற்றில் நீருக்கடியில் உள்ள மணலில் பாதி உடலைப்புதைத்துக் கொண்டு மறைந்து கொள்ளும். வாய்க்கால்களில் அணைகட்டி பக்கத்தில் பானைகளை வைத்துப் பிடிப்பர்)
  • இன்னும் பல
கடல் மீன்கள்
  • வஞ்சிரம் (வட மாவட்டங்களில்), நெய்மீன் அல்லது சீலா (தென் மாவட்டங்களில்)
  • சுறா Shark
    • பால் சுறா (பாலூட்டி? ஆட்டுக்கறியையொத்த சுவை கொண்டது, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பரிந்துரைப்பது)
  • நெத்திலி (சிறியது, கருவாடு விரும்பி உண்ணப்படும்)
  • பாரை (பார்க்க: பேச்சு:பாரை)
    • மஞ்சள் பாரை
  • காக்கைக் கொத்தி (ஊசியான 'மூக்கு' உடையது)
  • சாலை அல்லது மத்தி (சிறிய முள்ளுடன் சேர்த்தே உண்ணப்படுவது)
  • அயிலை
  • வாவல் அல்லது வௌவால் (angel fish போன்று தட்டையாக இருப்பது)
  • ஓங்கில் (மீனல்ல பாலூட்டி)
  • இரால் (மீனல்ல prawn)

(பின்வரும் மெல்லுடலிகளைப் பற்றி பூமிநாதன் விளக்க வேண்டும், கார்த்தி: அவரைக் கேளுங்களேன்)

மிக அருமையான பகிர்வு சுந்தர்! நெத்திலியின் அறிவியற்பெயர் Stolephorus baganensis என்பதாக இங்கு பார்த்தேன். --செல்வா 13:47, 6 மார்ச் 2009 (UTC)

தமிழ்நாட்டு உயிரினங்கள் பற்றி[தொகு]

இந்த வலைத்தளத்தில் தமிழ்நாடு செடிகொடி, உயிரின வகைகள் பற்றிய சுருக்கமான தகவல்களும் ஆய்வுக்கட்டுரைகளின் குறிப்புகளுமுள்ளன

--செல்வா 00:16, 6 மார்ச் 2009 (UTC)