பேச்சு:நினைவக உயிரணு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைவக உயிரணு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மனனம் உயிரணு அல்லது நினைவு உயிரணு ! உயிரணு என்ற எல்லா இடத்தில் பயன்படுத்தினால் நன்று. --Natkeeran 01:24, 29 ஜூலை 2009 (UTC)

ஆம், மகிழ்நன், நினைவக உயிரணு எனலாம். எல்லா இடத்திலும் உயிரணு என்றே எழுதுவது நல்லதாக இருக்கும். ஆங்கிலத்திலும் cell என்பது பிற சூழல்களில் cyto- என்னும் முன்னொட்டுடன் வருவதைப் பார்க்கலாம். செல் என்னும் சொல் சில இடங்களில் go என்னும் பொருள் சுட்டி குழப்பம் தரலாம். செலுத்துவதால் செல், செல்லு என்றும் சொல்லலாம்தான், ஆனால் உயிரணு என்பது பொருத்தமான சொல். அதே போல குரோமோசோம் என்பதை அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி நிறப்புரி என்று குறிக்கின்றது. புரி என்பது இங்கு இழை என்னும் பொருளில் ஆளப்படுகின்றது. இங்கு இன்னும் ஒரு பொருளிலும் சிறப்பாகப் பொருந்துக்கின்றது. புரிவது (உயிரணு பிரிந்து சினை உயிரணு உருவாகி வழிவழியாய் பண்புகளை எடுத்துச் செல்ல துணை புரிவதால், புரி) என்னும் பொருளும் கொள்ளும். நன்றாக நிறச்சாயம் (டை) வழி நிறம் ஏற்பதால் நிறப்புரி. --செல்வா 02:09, 29 ஜூலை 2009 (UTC)
நினைவக உயிரணு எனலாம். மனனம் என்பது பெயர்ச்சொல்லாக உள்ளது. நிறப்புரி நன்று, செல்வா. அதையே ஆளலாம். புரி என்பதைக் கொண்டு உணர்த்தும் சிறப்புப்பொருளும் அருமை. -- சுந்தர் \பேச்சு 02:14, 29 ஜூலை 2009 (UTC)

நன்றி , கருத்துகள் அருமை.

அப்படியே மாற்றி விடுகிறேன்... நன்றி --Munaivar. MakizNan 02:21, 29 ஜூலை 2009 (UTC)

சுந்தர், மகிழ்நன் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இப்போதைக்கு நிறப்புரி என ஒரு குறுங்கட்டுரையைத் துவக்கி உள்ளேன். இக்கட்டுரையையும், இதன் உள்ளிணைப்புக் கட்டுரைகளையும் விரிவாக எழுதுதல் வேண்டும். --செல்வா 03:28, 29 ஜூலை 2009 (UTC).

sure. including chromatin also --Munaivar. MakizNan 03:48, 29 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நினைவக_உயிரணு&oldid=1471078" இலிருந்து மீள்விக்கப்பட்டது