பேச்சு:தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு உதவி பெறும் கல்லூரிகள் எனும் தலைப்பிற்கு பொதுவான தகவல்கள் மட்டுமே தேவையானது. இந்தக் கட்டுரையில் தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளின் பட்டியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலாகவும் உள்ளது. பொறியியல் மற்றும் இதரக் கல்லூரிகளின் பட்டியல் இல்லை. இந்தக் கட்டுரையில் உள்ள பட்டியல்களை தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எனும் கட்டுரைப் பக்கத்தைத் தனியாக உருவாக்கி இணைக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:48, 26 பெப்ரவரி 2011 (UTC)

நானறிந்து பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் அரசு உதவிக் கல்லூரிகள் எதுவும் இல்லை (அரசு கல்லூரி, தனியார் கல்லூரி என இரு பிரிவுகள் மட்டும் உள்ளன.). கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனும் அப்படி உள்ளனவா? --சோடாபாட்டில்உரையாடுக 11:44, 26 பெப்ரவரி 2011 (UTC)
அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பட்டியலில் மருத்துவக் கல்லூரி வேண்டுமானால் தற்போது இல்லை. பொறியியல் கல்லூரிகளில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி ஆகியவை அரசு உதவி பெறும் கல்லூரி பட்டியலில் உள்ளவை. (இந்த இரு கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற முயன்ற நிலையில் இதற்காக இங்கு பணியாற்றிய பலர் அப்படி மாற்றக்கூடாது என்று போராடிய நினைவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள்...) இதுபோல் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் சில உள்ளன. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:50, 27 பெப்ரவரி 2011 (UTC)
சந்தேகம் தீர்ந்தது. தலைப்பை நீங்கள் சொன்னபடியே மாற்றிவிடலாம். (பட்டியல் கட்டுரையாக)--சோடாபாட்டில்உரையாடுக 04:17, 27 பெப்ரவரி 2011 (UTC)