பேச்சு:ஞமலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞமலி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  1. பட்டினப்பாலை
    வரையாடு வருடைத் தோற்றம் போலக்
    கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை ... 140 (பட்டினப்பாலை)
  2. பாரதியார் பாடல்கள் : ஞமலி போல் வாழேல்
  3. அகநானூறு
    • அர வாய் ஞமலி மகிழாது மடியின்
    • விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
  4. குறிஞ்சிப்பாட்டு: முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
  5. குறுந்தொகை: 179x02 எல் உம் எல்லின்று ஞமலி உம் இளைத்தன
  6. மலைபடுகடாம்: 042 மதம் தபு ஞமலி நாவின் அன்ன
  7. நற்றிணை: மனை வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
  8. பதிற்றுப்பத்து:கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை
  9. பெரும்பாணாற்றுப்படை
    • பகு வாய் ஞமலியொடு பை புதல் எருக்கி
    • ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
    • மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
  10. புறநானூறு:தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
  11. சீவகசிந்தாமணி
    • நின்று எஞ்சு கின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
    • வண்ணப் பூம் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
  12. கந்தபுராணம்
    • நிணம் கவர் ஞமலி ஓர் சார் ஞெரேல் எனக் குரைப்பப் புள்ளின்
    • நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலி நீர் நசையால்
    • மறம் தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பிலோர்கள்
    • அலை வணக்கரும் ஞமலி எம் அடிகளை அடைந்தோர்
    • பாடு உற்றன ஞமலித் தொகை பரவுற்றன கொடிமேல்
    • தசை கவர் ஞமலிகள் தலைச் சென்று ஈர்க்கவும்
    • கூர்ந்தனன் ஞமலி ஊர்தி கொற்ற வெம் படையை வாங்கி
  13. பெரியபுராணம்
    • குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யார்த்த
    • கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
  14. திருவிளையாடற்புராணம்
    • கட்டி இட்ட வலை பிழைத்து ஞமலி கௌவ நின்றவும்
    • நன்வு கொல்லோ கனவு கொல்லோ இன்று நாதன் ஞமலிக்குத் தவிசு இட்ட நலம் போல் என்னை
  • பொதுவன் அய்யா! சில இலக்கிய மேற்கோள்களை மேலே கொடுத்துள்ளேன். இச்சொல் பல்பொருள் ஒரு மொழி என்பதால், தேவையான இடத்தில் பயன்படுத்த வேண்டுகிறேன். இன்னும் பிறவற்றை பிறகு இணைக்கிறேன். விக்சனரியில் இச்சொல்லைப் படங்களுடன் மேம்படுத்தி வருகிறேன். அப்பணி முடிந்த பின்பு, இங்கு அதற்குரிய வார்ப்புருவை இணைக்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:44, 16 மே 2013 (UTC)[பதிலளி]
  • உழவனுக்கு உழவன் உதவுகிறார். பெரிதும் நன்றி. ஞமலி சங்ககாலத்தில் எவ்வாறு பயன்பட்டது என்பதை விளக்குவதே கட்டுரையின் நோக்கம். தங்களின் சொல்விளக்கத்தை இணைத்துள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 05:46, 16 மே 2013 (UTC)[பதிலளி]
  • பெரியபுராணம்+திருவிளையாடற்புராண மேற்கோள்களுடன் எனது ஒத்துழைப்பை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் மற்றொமொரு கட்டுரையில் சந்திப்போம். வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 06:48, 16 மே 2013 (UTC)[பதிலளி]
  • .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஞமலி&oldid=1553611" இலிருந்து மீள்விக்கப்பட்டது