பேச்சு:சேவியர் தனிநாயகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவியர் தனிநாயகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவரைப் பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா? தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள். இவர் விக்கிபீடியாவில் இடம் பெரும் அளவிற்கு பிரபலமாக இல்லாவிடில் இக்கட்டுரையை நீக்கிவிடலாம் என்று கருதுகிறேன். -- Sundar \பேச்சு 06:32, 21 டிசம்பர் 2005 (UTC)


சுந்தர், தனிநாயகம் அடிகளார் ஒரு இணையற்ற தமிழ் அறிஞர். அவரின் காரணமாகவே உலகதமிழ் ஆராய்சி மாநாடு யாழில் நடைபெற்றதாக எங்கேயோ படித்ததாக நினைவு. நிச்சியமாக அவரைப்பற்றிய கட்டுரை விரிவு படுத்தப்பட வேண்டும். --Natkeeran 07:27, 21 டிசம்பர் 2005 (UTC)
தவறுக்கு வருந்துகிறேன். அவர் தமிழ் அறிஞரென்றால் கண்டிப்பாக இக்கட்டுரையை விரிவுபடுத்தலாம். -- Sundar \பேச்சு 07:40, 21 டிசம்பர் 2005 (UTC)


Notes from Thesigal[1][தொகு]

மாலன் இன்று தமிழ் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஆனால் அறுபதுகளிலேயே தமிழ் பேசும் நாடுகளில் உள்ள அறிஞர்களைத் திரட்டிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் விதத்தில், தனிநாயகம் அடிகள் முயற்சியால், முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. தனிநாயக அடிகள் பற்றி சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?

ரெ.கா:தனிநாயக அடிகளாரின் சிறப்பை அறிந்து அவரை மலேசியாவுக்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் சிங்கப்பூர் தமிழர் தலைவரான கோ.சாரங்கபாணி அவர்கள்தான். மலாயாத் தமிழர்களுக்குக் கலாச்சாரப் புத்துணர்வையும் தமிழ் உணர்வையும் தருவதற்காக கோ.சா. ஏற்பாடு செய்து நடத்திய தமிழர் திருநாள் விழாவுக்காகத் தவத்திரு தனிநாயகம் 50-களில் முதலில் வந்தார். அதன்பின் மலாயாப் பல்கலைக் கழகத்தில் 60-களில் தமிழ்த்துறை நிறுவப்பட்டபோது அதன் தலைவராகப் பொறுபேற்று வந்தார்.

தனிநாயக அடிகளார் தமிழ் உலகில் மலேசியாவை பலவழிகளில் அறிமுகப்படுத்தினார். அதில் முக்கியமானது அவர் முயற்சியில் விளைந்த முதல் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. மலேசிய அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் அதனைப் பெரிய அளவில் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தார். அது முழுக்கவும் ஒரு கல்வி மாநாடாக நடைபெற்றது. அந்தக் கட்டுரைகள் அடங்கிய நூல் (proceedings) இன்றளவும் சிறந்த அறிவு நூலாகக் கருதப் படுகிறது.

அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில்தான் தமிழ்ப் புத்திலக்கியம் தமிழ்த்துறையில் ஒரு பாடமாக இடம் பெற்றது. அந்த ரம்ப காலத்தில் அதைப் போதித்தவர் முனைவர் ஈ.சா.விஸ்வநாதன். அடிகளாரின் ஆதரவில் கல்கி பற்றிய கருத்தரங்கம் ஒன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது.

தென்கிழக்காசியாவுக்கும் தமிழகத்திற்கும் இருந்த பண்டைக்காலத் தொடர்புகள் பற்றிய பல ஆய்வுகளைச் செய்து அவர் அறிவுலகிற்கு அறிவித்துள்ளார். அவரோடு அந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் பேராசிரியர் எஸ். அரசரத்தினமும் ஒருவர்.

அடிகளார், முனைவர் விஸ்வநாதன், முனைவர் அரசரத்தினம் ஆகியோரின் அபிமான மாணவனாக 60-களில் நான் இருந்திருக்கிறேன் என்பதை பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

மதமாற்றம்[தொகு]

நற்கீரன், //பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்த இவர் கிறித்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிசுலாசு என்பதாகும்.// என்ற வரிகளை நீக்கியிருக்கிறீர்கள். இவரது தந்தையாரே இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதனைக் கட்டுரையில் தரவேண்டும். மற்றும், ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் அவரது பூர்வீகமும் (பூர்வீகம் தெரிந்தால்) இடம் பெறவேண்டியதே முறை. இவ்வாறு தகவலை நீக்குதல் சரியல்ல. அக்காலத்தில் இலங்கையில் பிறந்த கிறித்தவர்களுக்குப் பொதுவாக கிறித்தவப் பெயரும், தமிழ்ப் பெயரும் இருப்பது வழக்கம்.--Kanags \உரையாடுக 02:40, 10 மார்ச் 2013 (UTC)