பேச்சு:சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பு பொருத்தம் இல்லை. abuse என்ற கருத்து இந்த தலைப்பில் வரவில்லை. --Natkeeran (பேச்சு) 13:16, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அப்படியானால், child sex என்பதற்குதான் இத்தலைப்பு பொருந்துமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:20, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இல்லை. அது குழந்தைகள் பாலுறவு என்றலவா வரும். --Natkeeran (பேச்சு) 13:31, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"Child Sexual Abuse" என்பதனை "குழந்தைகளுடனான பாலுறவு" என்றோ, "குழந்தைகள் பாலுறவு" என்றோ கூறும் போது அங்கே "உறவு" எனும் பதம் வெளிவருவதைக் கவனிக்கவும். சமூகச் சீர்கேடான அல்லது முறைகேடான ஒரு நடத்தையை எவ்வாறு உறவு என குறிக்கமுடியும்? அதனை குழந்தைகளுடனான பாலியல் முறைகேடு என்றோ சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு என்றோ குறிப்பிடல் பொருத்தமானது.
அதிலும் வன்முறை சார்ந்த செயல்பாட்டை "குழந்தைகளுடனான பாலியல் வன்முறை", குழந்தைகளுடனான பாலியல் வன்கேடு", "குழந்தைகளுடனான பாலியல் வன்கொடுமை" போன்ற சொற்கள் கொண்டு விவரிக்கலாம்.−முன்நிற்கும் கருத்து HK Arun (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
குழந்தை என்பதை விட சிறுவர் என்பதே பொருத்தம்.--Kanags \உரையாடுக 20:36, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் சிறுவர் , சிறுமியர் எனத் தனித்தனியே குறிக்கப்படுறது. எனவே குழந்தைகள் அல்லது சிறார்களுடனான என்பதே சரி. அத்தலைப்பிற்கு மாற்றுகிறேன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:41, 11 ஏப்ரல் 2013 (UTC)

”சிறார்களின் மீதான பாலியல் முறைகேடு” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:13, 15 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]