பேச்சு:சங்கம் (முச்சங்கம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கம் (முச்சங்கம்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிரிப்பின் காரணம்[தொகு]

அன்புள்ள சோடாபாட்டில்! பிரிப்பு வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளீர்கள். நன்றி. இப்போது பாருங்கள். பிரிப்பின் காரணம் விளங்கும். அன்புள்ள --Sengai Podhuvan 21:40, 26 மே 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

முச்சங்கம் என எளிமையான தலைப்புக்கு நகர்த்தலாம். --AntanO 01:53, 13 செப்டம்பர் 2015 (UTC)

தமிழ்ச் சங்கம் என்ற சிறு கட்டுரையும் உள்ளது. அதன் வரலாற்றையும் பார்த்தால் முதலில் மயூரநாதன் தொடங்கி, பின்னர் செங்கைப்பொதுவன் சங்கம்-முச்சங்கம் என்ற பெயரில் வேறொரு கட்டுரை தொடங்கி இரண்டும் வரலாற்றுடன் இணைக்கப்பட்டு, பின்னர் செங்கைப்பொதுவனின் வேண்டுகோளின் படி தனியே பிரிக்கப்பட்டது (புதிய பிரிக்கப்பட்ட கட்டுரையில் மூல வரலாறு வரமாட்டாது). ஆனாலும், ஏன் இரண்டு கட்டுரைகள் இருக்க வேண்டும் எனத் தெரியவில்லை. அன்ரன் கூறியது போன்று இக்கட்டுரையை முச்சங்கம் எனத் தலைப்பிட்டு தமிழ்ச் சங்கம் கட்டுரையுடன் வரலாற்றுடன் இணைக்கலாம். தமிழ்ச்சங்கம் கட்டுரையில் உள்ள அறிமுகப் பகுதி நன்றாக உள்ளது. ஒரே தலைப்பில் பல கட்டுரைகள் தேவையில்லை. மேலும், சங்கம்-முச்சங்கம் என்ற தலைப்பும் பொருத்தமாக இல்லை. சங்கம்-முச்சசங்கம் என்ற பெயரில் நூல் ஒன்று வெளிவந்ததால் அத்தலைப்பையே இக்கட்டுரைக்கும் செங்கைப்பொதுவன் ஐயா இட்டிருக்கலாம்.--Kanags \உரையாடுக 02:42, 13 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் இரு கட்டுரைகளையும் இணைத்து முழுமையான ஒரு கட்டுரையைப் பெறலாம். --AntanO 03:00, 13 செப்டம்பர் 2015 (UTC)

ஆண்டன் அவர்களின் குறிப்பு நிறைவேற்றப்பட்டு - தலைப்பை மாற்றுக- குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 15:55, 13 செப்டம்பர் 2015 (UTC)

இக்கட்டுரை தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான நூல்கள் தோன்றிய சங்கம் பற்றியது.
தமிழ்ச் சங்கம் என்னும் கட்டுரை தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் தோன்றி வளர்ந்த பல்வேறு சங்கங்களைப் பற்றியது.
எனவே இணைப்பது பொருத்தமற்றது. இதனைக் கருத்தில் கொண்டு இணைப்புக்குறி நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 21:26, 17 செப்டம்பர் 2015 (UTC)

ஆனால், நீங்கள் எழுதிய இக்கட்டுரையில் தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்புத் தானே ஆரம்பத்தில் தரப்படுகிறது. தமிழ்ச்சங்கம் வேறு, முச்சங்கம் வேறு என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டும் ஒன்றல்ல என்பதை ஆதாரத்துடன் கட்டுரையில் ஆரம்பத்திலேயே தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:47, 17 செப்டம்பர் 2015 (UTC)

தக்கதாக வழங்கப்பட்ட கனகசீர் அவர்களின் அறிவுரை ஏற்கப்பட்டு, கட்டுரை செப்பம் செய்யப்பட்டு, இணைப்புக்குறி நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 22:00, 19 செப்டம்பர் 2015 (UTC)