பேச்சு:கொலாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலில் இது கொலாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஞாபகம்.--பாஹிம் (பேச்சு) 12:43, 6 மார்ச் 2015 (UTC)

பாஹிம், கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கா. கோவிந்தன், க. ரத்னம் ஆகியோரின் மொழிபெயர்ப்பு) நூலில் இந்த மொழி பற்றி எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. தயவு செய்து எங்கே பார்த்தீர்கள் என்பதைக் குறிப்பிடவும். -- மயூரநாதன் (பேச்சு) 17:20, 7 மார்ச் 2015 (UTC)
ஜி. ஜான் சாமுவேல் என்பவர் எழுதி 2008ல் வெளிவந்த திராவிட மொழிகளின் ஒப்பாய்வு (ஓர் அறிமுகம்) என்னும் நூலில், இம்மொழி "கொலாமி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு ஏதாவது தமிழ் நூலிலும் பார்த்துவிட்டு மாற்றிவிடலாம். -- மயூரநாதன் (பேச்சு) 17:34, 7 மார்ச் 2015 (UTC)

நான் புத்தகத்தின் தலைப்பை மாற்றிக் கூறி விட்டேன் போலும். நெடுங்காலத்துக்கு முன்னர் கொழும்பில் புதுக்கடையிலுள்ள நூலகமொன்றில் வைத்து வாசித்த ஞாபகத்தில் தான் கூறினேன்.--பாஹிம் (பேச்சு) 23:35, 7 மார்ச் 2015 (UTC)

kolami என்பதை உள்ளூர் மக்கள் எவ்வாறு அழைக்கிறார்கள் என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும். அது தெரியாதவிடத்து மயூரநாதன் குறிப்பிட்ட நூலை மேற்கோள் காட்டி கொலாமி எனவே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 00:45, 8 மார்ச் 2015 (UTC)
ஆம், கனகு. உள்ளூரில் எப்படி அழைக்கிறார்களென்று தெரியவில்லை. மராத்தி மொழியில் கோலாமீ என்று தலைப்பிட்டு, ஆதிவாசிகளான கோலாம் இனத்தினர் அம்மொழியைப் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.--பாஹிம் (பேச்சு) 01:46, 8 மார்ச் 2015 (UTC)

இம்மொழி ஆந்திரப் பிரதேசத்திலும் மகாராட்டிரத்திலும் பயன்படுத்தப்படுவதாக ஆங்கிலக் கட்டுரையிலுள்ளது. தமிழ்க் கட்டுரை ஆந்திரப் பிரதேசத்திலும் ஒடிசாவிலும் என்கிறது. எத்னோலொகு (Ethnologue) வலைத்தளம் இதனை தென்கிழக்கு கொலாமி, வடகிழக்கு கொலாமி என இரு மொழிகளாக வகைப்படுத்துகிறது. எத்னோலொகு வலைத்தளம் பல்வேறு மொழிகளையும் பற்றிய விபரங்களைத் தருவதால் நாம் இவ்விடயத்தில் ஆங்கில மொழி விக்கிப்பீடியாவுக்குப் பதிலாக எத்னோலொகு வலைத்தளத்தைச் சார்ந்திருப்பதே சரியென்று தோன்றுகிறது.--பாஹிம் (பேச்சு) 02:01, 8 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொலாமி&oldid=1893145" இலிருந்து மீள்விக்கப்பட்டது