பேச்சு:கெண்டி (தாவரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெண்டி (தாவரம்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பகுப்பு பற்றி நெப்பந்திசு ஒரு பூக்கும் தாவரமாயினும் இதன் பூ மலராக முக்கியத்துவமுடையதல்ல. இதன் குடுவையுரு உண்மையில் இலை நுனியில் தந்து திருபடைந்து உருவான அமைப்பே. ஆகவே ஊனுண்ணித் தாவரங்கள் என்ற பகுப்பில் வைக்கிறேன். மலர் பகுப்பை நீக்கப் பரிந்துரைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 06:58, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சஞ்சீவி அப்படியே செய்யுங்கள். மேலும் இது இலங்கையில் வேறு ஒரு பெயரால் தமிழில் அழைத்த ஞாபகம். உங்களுக்குத் தெரியுமா?--Kanags \உரையாடுக 07:03, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நானும் உயர் தரம் படித்தபோது இதற்கு வேறு தமிழ்ப் பெயர் சொன்ன ஞாபகம். சரியாகத் தேடிப் பார்த்து, கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டும்.--பாஹிம் 06:11, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நெப்பந்திசு போன்ற தாவரங்கள் பூச்சிகளை மட்டுமே பிடித்து உண்ணுகின்றன. (அவற்றிலுள்ள நைடரஜனுக்காக) எனவே ஊனுண்ணி என்பதை விட பூச்சியுண்ணி என்பது சரியென நினைக்கிறேன். பிப்ளிடேசியீ, செப்பலோடேசியீ, திரொசிரேடியீ,லண்டிபுளோரேசியீ, நெப்பெந்தேசியீ, சாரசீனியேசியீ என்பன பூச்சியுண்ணிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களாகும். இவற்றில் பல பேரினங்களும் வகைகளும் உள்ளன.--Parvathisri 06:35, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பூச்சியுண்ணி என்று இங்கு உருவாக்க வேண்டியதில்லை. ஏராளமான பூச்சியுண்ணும் தாவரங்கள் இருக்கின்றன. நெப்பந்திசுக்குத் தனியான தமிழ்ப் பெயர் உள்ளது. அதனைப் பார்த்துச் சொல்கிறேன்.--பாஹிம் 06:38, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பூச்சியுண்ணிகள் என பகுப்பைச் சொன்னேன்.தமிழகத்தில் இதனை 'சாடித் தாவரம்' (ஜாடித்தாவரம்) அல்லது 'குடுவைத்தாவரம்' என்று அழைக்கிறார்கள்.--Parvathisri 06:48, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கெண்டி[தொகு]

இலங்கையில் இத்தாவரம் கெண்டி என்று அழைக்கப்படுகிறதா? கெண்டி என்றால் என்ன பொருள்?--சிவக்குமார் \பேச்சு 09:35, 12 சூன் 2012 (UTC)[பதிலளி]

கெண்டி என்றால் குடுவை, சாடி, முனிவர்கள் வைத்திருப்பதாக புராணங்களில் கூறும் கமண்டலம் எனப் பலவாறு குறிக்கப்படும். பார்க்க: கெண்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெண்டி_(தாவரம்)&oldid=1134959" இலிருந்து மீள்விக்கப்பட்டது