பெண் தொழில்முனைவோர் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (Confederation of Women Entrepreneurs - COWE) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஐதராபாத்தில் (முன்னர் பிரிக்கப்படாத ஆந்திரா) 2004 ஆம் ஆண்டில் மகளிர் தொழில் முனைவோர் உணர்வை மேம்படுத்தும் நோக்கில் அரசு உதவியுடன் ஆறு வெற்றிகரமான முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோரை இயக்குநர்களாக கொண்டு ஆரம்பிக்கபட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன / சமூக அமைப்பாகும்.

வரலாறு[தொகு]

சமூக மற்றும் பொருளாதார "தொழில்முனைவு மூலம் பெண்களை மேம்படுத்துவதில்" ஈடுபட்டுள்ள இது 22 டிசம்பர் 2004 அன்று இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹாலில் ஆந்திரப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. [1]

உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், அச்சிடுதல், சிப்பமிடுத;, உற்பத்தி, சில்லறை விற்பனை, உற்பத்தி தொழில்கள், துணி மற்றும் பல துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்தொழில்முனைவோர் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அமைப்பாக இயங்குகிறது.[2]

ZDH-SEQUA என்ற உலகளாவிய அமைப்புடன் இந்த அமைப்பும் பங்குதாரராக இருந்து இவ்விரு கூட்டாண்மை திட்டத்தின் ஆதரவுடன் இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் ஆய்வுச் சுற்றுப்பயணங்களாக ஆஸ்திரேலியா, இலங்கை, ஜெர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள பெண் தொழில்முனைவோரை கலந்து அதனை இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தலாம் என கண்டறிந்து வருகிறார்கள்.

பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள உறுப்பினர் அமைப்புகளுடன் இணையவும், COWE தனது முதல் வர்த்தக கண்காட்சியான COWE வர்த்தக திருவிழாவை 26-28 அக்டோபர் 2007 அன்று ஹைதராபாத்தில் உள்ள நெக்லஸ் சாலையில் ஏற்பாடு செய்தது. அதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் தொழில்முனைவோராக மாறுவதற்கும், தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உதவுவதற்கும் பெண் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (COWE) ஏற்பாடு செய்த 3 நாள் திருவிழா ஹைதராபாத்தின் நெக்லஸ் சாலையில் உள்ள பீப்பிள்ஸ் பிளாசாவில் நடத்தப்பட்டது.[3]

பெண்கள் சந்திக்கவும், ஒத்துழைக்கவும், பெண்கள் தலைமையிலான வணிகங்களைக் கொண்டாடவும் உதவும் வகையில் 2022 ஆம் ஆண்டில் மார்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது.[4]

நிறுவன உறுப்பினர்கள்[தொகு]

  • திருமதி ஷைலஜா ரெட்டி
  • செல்வி சுமன்குமார்
  • திருமதி உமாகுர்கா
  • செல்வி சௌதாமினி
  • திருமதி சந்தியா ரெட்டி
  • திருமதி கிரிஜா ரெட்டி

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (2016-2017)[தொகு]

  • திருமதி கீதா கோட்டி, தலைவர்
  • திருமதி ஆர்.ராமாதேவி, துணைத் தலைவர்
  • வந்தனா மகேஸ்வரி, தேசிய செயலாளர்
  • செயலாளர் திருமதி அலரி லலிதா
  • திருமதி நீரஜா ரெட்டி, ஜே.டி. செயலாளர்
  • செல்வி ஜியோஸ்ட்னா செருவு, பொருளாளர்
  • திருமதி பி.கிரிஜா, முன்னாள் தலைவர்

இவ்வமைப்பைப்பற்றி வெளிவந்துள்ள செய்திகள்[தொகு]

  • COWE ஆனது ஒரு வணிக கண்டுபிடிப்பு மையத்தை அமைத்துள்ளது, இது உலகெங்கிலும் உள்ள பெண் தொழில்முனைவோர் மத்தியில் ஒரு நெட்வொர்க்கிங் வட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட வணிகத்திலிருந்து வணிகத்திற்கான போர்ட்டலாகும். கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் (UEL) இணைந்து COWE ஆல் BIC அமைக்கப்பட்டது. [5]
  • 200 கோடிக்கும் அதிகமான முதலீட்டையும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்பையும் ஈர்ப்பதாகக் கூறப்படும் உணவுப் பூங்காவை COWE அமைத்தது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "> english". www.zdh.de. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.
  2. "sequa gGmbH". Sequa.de. பார்க்கப்பட்ட நாள் 2012-07-06.
  3. ""தொழில்முனைவோர் மூலம் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல்," உமா கூர்கா, தலைவர், COWE - வர்த்தக திருவிழா".
  4. Today, Telangana (2022-02-18). "ஹைதராபாத்தில் மார்ச் மாதம் வணிக பெண்கள் கண்காட்சி". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-17.
  5. Samal, Itishree (23 November 2010). "Virtual business innovation centre to help women entrepreneurs". http://www.business-standard.com/india/news/virtual-business-innovation-centre-to-help-women-entrepreneurs/415757/. 
  6. Kanth, K. Rajani (5 October 2009). "Cowe's food park to attract Rs 200 crore". http://www.business-standard.com/india/news/cowes-food-park-to-attract-rs-200-crore/372155/.