பி. ராமச்சந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ராமச்சந்திர ரெட்டி
நெல்லூர் மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்ரெபலா லெட்சுமிநரச ரெட்டி
தலைவர் தமிழ்நாடு சட்ட மேலவை
பதவியில்
6 நவம்பர் 1930 – 18 ஜூலை 1937
முன்னையவர்வி. எஸ். நரசிம்மராஜூ
பின்னவர்புலுசு சாம்பமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-11-24)24 நவம்பர் 1894
கவட்டி, சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு19 மார்ச்சு 1973(1973-03-19) (அகவை 78)
நெல்லூர் மாவட்டம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிநீதிக் கட்சி,
சுதந்திராக் கட்சி
துணைவர்பி சீதாம்மா & பி. புஜ்ஜூமா
தொழில்விவசாயி, அரசியல்வாதி

பி. ராமச்சந்திர ரெட்டி (24 நவம்பர் 1894 - 3 மார்ச் 1973) என்பவர் நீதிக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் சுதந்திரக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராவார். 1930 முதல் 1937 வரை தமிழ்நாடு சட்ட மேலவை தலைவராகப் பணியாற்றினார். ராமச்சந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி பெசவாடா கோபால ரெட்டியின் உறவினர் ஆவார். [1] இவர் 19 மார்ச் 1973 அன்று இறந்தார் [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராமச்சந்திர ரெட்டி 1894 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் உள்ள புச்சிரெட்டிபாலத்தில் ஸ்ரீ சுப்பா ரெட்டி & கமலா (தோட்லா) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [3] 1919 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசியலில் நுழைந்து நெல்லூர் மாவட்டக் கல்விக் குழுவின் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றினார். 1929 இல், அவர் மாவட்ட வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணம்[தொகு]

அவர் தொட்லா சீதாவைத் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு அவரது தந்தை சுப்பா ரெட்டியின் பெயரிடப்பட்டது. முதல் மனைவி சீதா பிரசவத்திற்குப் பின் இறந்ததால் அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரி டோட்லா புஜ்ஜம்மாவை மணந்தார், அவர்களுக்கு 10 குழந்தைகள், 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் பிறந்தனர்.

சட்ட சபையில்[தொகு]

இவர் இளம் வயதிலேயே நீதிக்கட்சியில் சேர்ந்து 1923 தேர்தலில் வெற்றி பெற்றார். [4] தொடர்ந்து 1926, 1930 மற்றும் 1934 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஜஸ்டிஸ் கட்சி மாகாண ஆட்சியைக் கைப்பற்றியபோது, இவர் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் 6 நவம்பர் 1930 [5] முதல் மார்ச் 1937 வரை மெட்ராஸ் மேலவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1937 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

பெரியார் தனது அரசியல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபோது அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். 1944 இல் நீதிக்கட்சி பிளவுபட்டவுடன் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இறுதியாக 1952 இல் கட்சியை விட்டு வெளியேறினார்

1952 இல், இவர் முதல் மக்களவைத் தேர்தலில் நெல்லூரில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1952 முதல் 1957 வரை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

சுதந்திர கட்சி[தொகு]

ஜூன் 4, 1959 இல், சி. ராஜகோபாலாச்சாரி & என்.ஜி. ரங்கா மற்றும் பிற மூத்த அரசியல்வாதிகளுடன் இவர் சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு அதன் தாராளமயமாக்கல் கொள்கையைத் தொடங்கியபோது, அதன் சித்தாந்தம் நவீன இந்தியாவால் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Siba Pada Sen (1972). Dictionary of national biography. Institute of Historical Studies. பக். 81. https://archive.org/details/dli.bengal.10689.11619. 
  2. N. G. Ranga (1976). Distinguished acquaintances. Desi Book Distributors. பக். 235. 
  3. S. P. Singh Sud; Ajit Singh Sud (1953). Indian elections and legislators. All India Publications. பக். 126. 
  4. The Swatantra Party and Indian conservatism. 
  5. The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராமச்சந்திர_ரெட்டி&oldid=3817949" இலிருந்து மீள்விக்கப்பட்டது