பிளாஸ்டோபாகா பியெஸ்சென்னஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Blastophaga|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பிளாஸ்டோபாகா பியெஸ்சென்னஸ்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Blastophaga
இனம்:
இருசொற் பெயரீடு
Blastophaga psenes
(லின்னேயஸ், 1758)[1]
வேறு பெயர்கள் [2]
  • Blastophaga grossorum Gravenhorst, 1827
  • Blastophaga vaidi Joseph, 1954
  • Cynips psenes Linnaeus, 1758
இறக்கையுள்ள பெண்ணும், இறக்கையற்ற ஆணும்

பிளாஸ்டோபாகா பியெஸ்சென்னஸ் (Blastophaga psenes) என்பது பிளாஸ்டோபாகா பேரினத்தில் உள்ள ஒரு குளவி இனமாகும். இது பொதுவாக அத்தியில் காட்டத்தி போன்றவற்றில் மகரந்தச் சேர்க்கை செய்கிறது. [3] இந்தக் குளவிகள் குடியுருப்பு, கூடு போன்றவை இல்லாமல், அத்திப்பழங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் பெரிய பூச்சிகள் சில நாட்கள் அல்லது வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன. [4] இவை மகரந்தச் சேர்க்கை செய்ய விரும்பும் அத்திப்பழத்தை மோப்பப் புலன் மூலம் கண்டுபிடிக்கிறன. [5]

இவற்றில் ஆண் பூச்சிக்குச் சிறகில்லை. பெண்ணுக்குச் சிறகு நன்கு வளர்ந்திருக்கும். பெண் பூச்சி, அத்தி மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூவின் சூலறைக்குள் முட்டையிடும். முட்டை பொரிந்து புழுவாகிப் பிறகு கூட்டுப் புழுவாகி, பின்னர் அதிலிருந்து குளவி வெளிவரும். முட்டையிடப்பட்ட மலட்டுப்பூக் கரடாகிவிடும். கரட்டிலிருந்து வெளிப்படும் குளவி அத்தி மஞ்சரியிலிருந்து புறத்தே வரும். வருகிற வழியில் ஆண்பூக்களிலிருந்துஉண்டாகும் மகரந்தத்தூள் அதன் உடலில் ஒட்டிக்கொள்ளும். பூச்சி வேறொரு மஞ்சரியில் புகுந்தால், அங்குள்ள பெண் பூக்களில் இந்த மகரந்தத்தூள் சேரும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.

சீமை அத்திப்பழங்களில் சில உயர்ந்த வகைகளைப் பயிர் செய்வோர் அந்த அத்தியின் காட்டுவகைக் கிளைகளை மஞ்சரிகளோடு தந்து, அந்த உயர்ந்த மரங்களில் மகரந்தச்சேர்க்கை நிகழும்பொருட்டுக் கட்டுவார்கள்.[6]

குறிப்புகள்[தொகு]

  1. Vovlas, Nicola; Alessandra Larizza (1996). "Relationships of Schistonchus caprifici (Aphelenchoididae) with fig inflorescences, the fig pollinator Blastophaga psenes, and its cleptoparasite Philotrypesis caricae". Fundamental and Applied Nematology 19 (5): 443–448. 
  2. "Blastophaga psenes (Linnaeus, 1758)". GBIF.org. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  3. "Blastophaga psenes Linnaeus". Figweb. Archived from the original on 27 April 2015. பார்க்கப்பட்ட நாள் 20 April 2015.
  4. L. F. Kjellberg; P.-H. Gouyon; M. Ibrahim; M. Raymond; G. Valdeyron (July 1987). "The Stability of the Symbiosis between Dioecious Figs and Their Pollinators: A Study of Ficus carica L. and Blastophaga psenes". Evolution 41: 693–704. doi:10.2307/2408881. பப்மெட்:28564365. https://archive.org/details/sim_evolution_1987-07_41_4/page/693. 
  5. Hossaert-Mckey, M., M. Gibernau, and J. E. Frey (1994). "Chemosensory Attraction of Fig Wasps to Substances Produced by Receptive Figs". Entomologia Experimentalis et Applicata (The Netherlands Entomological Society) 70 (2): 185–91. doi:10.1007/BF02380526. https://www.researchgate.net/publication/227211380. பார்த்த நாள்: 11 October 2014. 
  6. தமிழ்க் கலைக்களஞ்சியம் பகுதி 1. அத்திப்பூச்சி

வெளி இணைப்புகள்[தொகு]