பிறையன் செனவிரத்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறையன் செனவிரத்னா
பிறப்புபிறையன் செனவிரத்னா
இலங்கை
இருப்பிடம்பிறிஸ்பேன், குயின்ஸ்லாந்து, அவுஸ்திரேலியா
பணிமருத்துவர், MA (Cantab), MBBChir (Cantab), MBBS (Lond), MD (Lond), FRCP( Lond), FRACP [1]
வாழ்க்கைத்
துணை
கமலினி

கலாநிதி பிறையன் செனவிரத்னா (Dr. Brian Senewiratne) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஓர் இலங்கை மருத்துவர். புலம்பெயர்ந்து இவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசியல்வாதி அல்லாத போதும், இலங்கை இனப் பிரச்சினைத் தொடர்பில் தமிழர் தன்னாட்சி உரிமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பேசிவருபவராகும். இவர் தன்னை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடுபவராகக் கூறிவருகின்றார்.

பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு சிங்களவராவர். இலங்கையின் முன்னாள் சனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் மைத்துனரும் ஆவார்[2]. இவரது மனைவியார் கமலினி செனவிரத்னா ஒரு தமிழராகும்.

இன்றைய இந்நிலைக்கான காராணம்[தொகு]

இவர் ஒரு பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றப் போதும், இவருடைய குடும்பத்தினர்களான பண்டாரநாயக்க வம்சத்தினர் செய்த அசட்டுத்தனமான பெருந் தவறுகளே நாடு இன்று இச்சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்றும், அதனையே மற்றைய இலங்கை அரசியல் தலைவர்களும் தொடர்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்[3]. தமிழர்கள் தமது உரிமைகள் தொடர்பாக அமைதி வழியிலும் மக்களாட்சி வழியிலும் போராடிய போது எவ்வித பயனும் கிடைக்கவில்லை. சிங்களப் பௌத்த பிக்குகளும் மற்றும் சில சிங்களத் தலைவர்களும் தமிழர் நலனுக்கு முட்டுக்கட்டையாகினர். இதனால் தமிழர் ஆயுத வழிப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதப் போராட்டக் குழுவாகும். பயங்கரவாதக் குழு அல்ல என்றும் [4] இலங்கை சிங்களவர்கள் இலங்கையை ஒரு சிங்களப் பௌத்த நாடாக[5] உணர்வதே இதற்கு காரணம் என்பதனையும் ஆணித்தரமாகக் கூறி வருகின்றார்[6].

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு[தொகு]

தமிழீழ விடுதலைக்கு ஆதரவான பொங்கு தமிழ் நிகழ்வுகளின் போதும் தென்னாப்பிரிக்கா[7], கனடா[8] போன்ற நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஈழத் தமிழர் போராட்ட நியாயப்பாடுகளை பேசி வருகின்றார்.

தமிழ் அரசியலாளர் படுகொலைக்கு எதிர்ப்பு[தொகு]

தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கையின் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலைச் செய்யப் படுவது தொடர்பிலும் இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்[9].

மேற்கோள்கள்[தொகு]

  1. TAMIL NATIONAL FORUM
  2. Dr. Brian Senewirathne -cousin of former Sri Lankan president Chandrika Kumaratunga Bandaranaike
  3. blunders after blunders and plunged the country into this situation today
  4. LTTE is an `armed group` not a terrorist group
  5. Sinhalese feels that Sinhalese want a Budhist Sinhala state
  6. Sinhala Buddhist Chauvinism & the Buddhist Clergy
  7. South African Tamils rally for Eezham Tamils' rights
  8. Spontaneous show of solidarity in Canada
  9. The murder of Parliamentarian Raviraj

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையன்_செனவிரத்னா&oldid=3792855" இலிருந்து மீள்விக்கப்பட்டது