பொங்கு தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைப்பதே பொங்கு தமிழ் ஆகும். இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அங்கு பின்வரும் மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஈழத்தின் பிற பகுதிகளிலும், புகலிட நாடுகளிலும் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

உரிமைக்கான குரல் இலங்கை அரசின் கொடுமைக்கு எதிரான குரல்[தொகு]

பொங்கு தமிழ் உலகத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமது குரலை வெளிப்படுத்தும் ஒர் அரங்கு. பல்வேறு சுதந்திரங்கள் உறுதி செய்யப்பட்ட மேற்குநாடுகளில் வெளிவரும் ஒரு குரல். பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தாலும், இது தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் கொண்டதாக கொள்ள முடியாது. தமிழர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காகவும் இதைக் கருதலாம்.

2008 பொங்கு தமிழ் நிகழ்வுகள்[தொகு]

2008 ஆண்டு பல்வேறு நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் நன்கு அறியப்பட்ட ஈழப்போராட்ட ஆதரவாளர்களும் இங்கு கலந்துகொள்கிறார்கள். இவர்களில் கவிஞர் அறிவுமதி, புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி குறிப்பிடத்தக்கோர் ஆவர்.

பொங்குதமிழ் நடத்தப்பட்ட நாடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நியூசிலாந்து தமிழர் பொங்கு தமிழ் 2008 நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர் - (ஆங்கில மொழியில்)
  2. தமிழீழத் தாயகத்துக்கு இத்தாலியத் தமிழர் ஆதரவு தெரிவிப்பு - (ஆங்கில மொழியில்)
  3. நோர்வேயில் பொங்கு தமிழ், 2008 - (ஆங்கில மொழியில்)
  4. "டென்மார்க்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  5. ஈழத்தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக தென்னாபிரிக்கத் தமிழர்கள் திரண்டனர் - (ஆங்கில மொழியில்)
  6. பிரான்சில் பொங்கு தமிழ் நிகழ்வுகளில் 7,000 பேர் பங்கேற்பு - (ஆங்கில மொழியில்)
  7. "ஜெர்மனியில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  8. "சுவீடனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  9. "பெல்ஜியத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  10. "நெதர்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  11. "பின்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள்". Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  12. ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு
  13. சுவிசில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியது
  14. மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்பு
  15. சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
  16. பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கு_தமிழ்&oldid=3638615" இலிருந்து மீள்விக்கப்பட்டது