பிரஜ்னா சௌதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஜ்னா சௌதா
பிறப்பு1970
அக்காரா, கானா
தேசியம் இந்தியா
பணிபாதுகாவலர், வனவிலங்கு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

பிரஜ்னா சௌதா (Prajna Chowta) ஓர் இந்தியப் பாதுகாப்பு நிபுணரும், வனவிலங்கு ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும் மற்றும் ஆசிய யானைகளைப் பற்றிய திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்ட ஆனே மனே அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவராகவும் இருக்கிறார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பிரஜ்னா சௌதா ஆப்பிரிக்க நாடான கானாவில் பிறந்தார். நைஜீரியாவிலும் பின்னர், இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூரிலும் வாழ்ந்து வந்தார். இவர் கன்னட எழுத்தாளரும் தொழிலதிபருமான த. கி. சௌதாவின் மகளும் மற்றும் இசை இயக்குனர் சந்தீப் சௌதாவின் சகோதரியுமாவார்.[1] [3]

கல்வியும் ஆராய்ச்சியும்[தொகு]

பிரஜ்னா சௌதா 1993 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் என்ற தலைப்பில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானை முகாம்களிலும் யானைப்பாகன்களின் சமூகங்களிலும் செலவிட்டார். மேலும், ஆசியாவிலேயே அரிதான பெண் யானைப்பாகன்களில் இவரும் ஒருவர். 1995 முதல், பிரஜ்னா இந்திய-மியான்மர் எல்லையில் ஆசிய யானைகளின் இடம்பெயர்வு மீது கவனம் செலுத்தினார். இந்தியா மற்றும் மியான்மரிலுள்ள யானைப்பாகனகளின் சமூகங்கள், பாரம்பரிய நுட்பங்கள்; மற்றும் யானைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் மேலாண்மை செய்தல் போன்றவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 2011 ஆம் ஆண்டு முதல், இந்தியா, பூடான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள புவியிடங்காட்டி பட்டைகளைப் பயன்படுத்தி யானைகளுக்கான தொலை கண்காணிப்பு அமைப்பை உருவாக்கினார்.[5] பிரஜ்னா சௌதா சமீபத்தில் அந்தமான் யானைகளின் வரலாற்றை ஆராய்ந்து வருகிறார்.[6][7]

விருதுகள்[தொகு]

2016 ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவரால் செவாலியே விருது பெற்றவர்.[8] [9]

வெளியீடுகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "May we have the trumpets please?". Deccan Herald."May we have the trumpets please?". Deccan Herald.
  2. "The Aane Mane Foundation | Asian Elephant Conservation | News". aanemane.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  3. "Sandeep Chowta". IMDb.
  4. "Elephant Conference @ SOAS 2016 – SOAS University of London". www.soas.ac.uk.
  5. "elephant tracking". www.elephanttracking.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  6. Adlakha, Nidhi (4 November 2017). "elephants crossing" – via www.thehindu.com.
  7. 7.0 7.1 "The Aane Mane Foundation – Asian Elephant Conservation – News". aanemane.org.
  8. "Remise de l'Ordre National du Mérite à Prajna Chowta et Jean Riotte". La France en Inde / France in India.
  9. Reporter, Staff (4 October 2016). "France confers knighthood on elephant researcher" – via www.thehindu.com.
  10. Gautier, Philippe; Chowta, Prajna (July 2000). Livre : Hathi, l'éléphant. Les 400 Coups. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782921620550. http://www.livres-cinema.info/livre/2302/hathi-l-elephant. 
  11. Gautier, Philippe; Chowta, Prajna (2 January 2018). Hathi, l'éléphant : l'aventure d'un tournage en Inde. Les 400 coups. ASIN 2921620553. 
  12. "Books – ancf". asiannature.org.
  13. "Beaux livres Elytis". elytis-edition.com.
  14. Chowta, Prajna; Ledoux, Stéphanie (2 October 2014). Enfant d'éléphants. ELYTIS. ASIN 2356391444. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்னா_சௌதா&oldid=3928085" இலிருந்து மீள்விக்கப்பட்டது