பிக்கனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்கனப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
அரசு
 • Created Byமாதேஸ் சிக்கேகௌடா
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635107
வாகனப் பதிவுTN
இணையதளம்en.wikipedia.org/wiki/Bikkanapalli

பிக்கனப்பள்ளி (Bikkanapalli) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த சிற்றூ ஆகும்[1]. இவ்வூர் கொல்லட்டி ஊராட்சிக்குட்பட்டது. இது தேன்கனிக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில், தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்து அந்தேவனப்பள்ளி பிரியும் சாலையில் உள்ளது. தேன்கனிக்கோட்டையில் இருந்து பிக்கனப்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் செல்கின்றன. இவ்வூர் பெங்களூரில் இருந்து 80 கி.மீ. (90 மைல்) தொலைவிலும், ஒசூரில் இருந்து 38 கி.மீ. (40 மைல்) தொலைவிலும் உள்ளது. இப்பகுதியின் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வூராட்சியில் சிக்கம்மா, தொட்டம்மா கோயிலும், கொல்லட்டி பட்டுப்பண்ணையும் புகழ்பெற்றவை ஆகும். இப்பகுதி மக்கள் தமிழ்,கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை பேசுபவர்களாக உள்ளனர்.

கொல்லட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 ஊர்கள்

  1. பிக்கனப்பள்ளி
  2. ஓமண்டள்ளி
  3. முச்சந்திரம்
  4. தண்ராமேடி
  5. கொல்லட்டி

பிக்கனப்பள்ளிதான் கொல்லட்டி ஊராட்சியின் தலைமையகமாகவும், முதன்மை ஊராகவும் உள்ளது.

மேற்கோள்[தொகு]

  • [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கனப்பள்ளி&oldid=3563301" இலிருந்து மீள்விக்கப்பட்டது