கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்டோன் முற்றுகை (Siege of Bastogne) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியம் நாட்டின் பாஸ்டோன் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றன.
டிசம்பர் 16, 1944ல் ஐரோப்பாவின் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலின் குறிக்கோள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றுவதாகும். ஆர்டென் காடு வழியாக நடைபெற்ற இத்தாக்குதலின் இலக்குகளின் ஒன்று பாஸ்டோன் நகரை விரைவில் கைப்பற்றுவது. நேசநாட்டுப் படைகள் சுதாரிக்கும் முன் ஆண்ட்வெர்ப் நகரை அடைய நெடுஞ்சாலைகள் வழியாக ஜெர்மானியப் படைகள் பயணிக்க வேண்டும். ஆர்டென் பகுதியிலுள்ள ஏழு முக்கிய சாலைகளும் பாஸ்டோன் நகரில் ஒன்று கூடின. பாஸ்டோன் நகரைக் கட்டுப்படுத்துபவர் எளிதில் ஆண்ட்வெர்ப் நகரை சாலைகள் மூலம் அடைய முடியும். இதனால் பாஸ்டோனை ஜெர்மானியப் படைகள் கைப்பற்ற முயன்றன.
பாஸ்டோன் நகரில் அமெரிக்க 101வது வான்குடை டிவிசன் நிறுத்தப்பட்டிருந்தது. டிசம்பர் 20ம் தேதி ஜெனரல் ஹாஸ்ஸோ வான் மாண்ட்டூஃபல் தலைமையிலான ஜெர்மானிய 5வது பான்சர் ஆர்மி பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டது. அடுத்த ஒரு வாரம் இரு தரப்பினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. அமெரிக்கப் படைகள் ஜெர்மானியத் தாக்குதலை சமாளித்து பாஸ்டோன் நகரைப் பாதுகாத்து விட்டன. டிசம்பர் 27ம் தெதி ஜெனரல் ஜார்ஜ் பாட்டனின் 3வது அமெரிக்க ஆர்மி பாஸ்டோன் நகரை அடைந்து ஜெர்மானிய முற்றகையை முறியடித்தது. பாஸ்டோன் நகரைக் கைப்பற்ற இயலாமையால் பல்ஜ் சண்டைக்கான ஜெர்மானியப் போர்த்திட்டம் தோல்வியடைந்தது.
படங்கள் [தொகு]
-
-
டிசம்பர் 19-23 தேதிகள் பாஸ்டோன் முற்றுகை நிலவரம்
-
பாஸ்டோன் முற்றுகையில் வீழ்ந்தவர்களுக்கு ஜனவரி 22, 1945ல் அஞ்சலிக் கூட்டம்
குறிப்புகள் [தொகு]
மேற்கோள்கள [தொகு]
- Ambrose, Stephen E. Band of Brothers. New York: Simon & Schuster Paperbacks, 1992.
- Turow, Scott. Ordinary Heroes. Farrar, Straus and Giroux (October 27, 2005)
அமைவிடம்: 50°00′00″N 5°43′17″E / 50, 5.7214