பார்வதி பாவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி, புராண கிலாவில், 2011 ஆண்டு ருஹானியாட் ஆன்மீக இசை விழாவில் பார்வதி பாவுல்

பார்வதி பாவுல் (Parvathy Baul, பிறப்பு 1976) என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பாவுல் நாட்டார் பாடகர், இசைக்கலைஞர் மற்றும் கதைசொல்லியும் ஆவார். இவர் இந்தியாவின் முன்னணி பாவுல் இசைக் கலைஞர்களில் ஒருவராக உள்ளார். [1] பால் குருசு, சனாதன் தாஸ் பாவுல், வங்காளத்தின் ஷாஷன்கோ கோஷாய் பாவுல் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற இவர், 1995 முதல் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இவர் புகழ்பெற்ற பாவா கதகளி கையுறை கைப்பாவை கலைஞரான ரவி கோபாலன் நாயரை மணந்தார். 1997 முதல் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அங்கு இவர் "ஏக்தாரா பாவுல் சங்கீதா கலரி" என்ற பாவுல் பாடல் கற்பிக்கும் பள்ளியையும் நடத்துகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

கொல்கத்தாவில் 2015 இல் பார்வதி.

பார்வதி பாவுல் மேற்கு வங்காளத்தில் ஒரு பாரம்பரிய வங்காள பிராமண குடும்பத்தில் மௌசுமி பரியலாக பிறந்தார். இவரது குடும்பத்தின் பூர்வீகமானது கிழக்கு வங்காளம் ஆகும். இந்திய பிரிவினைக்குப் பின்னர் குடும்பமானது மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்தது. இவரது தந்தை, இந்திய ரயில்வேயில் பொறியலாளராக இருந்தர், மேலும் இந்திய பாரம்பரிய இசையில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அடிக்கடி தனது மகளை இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார். இவரது தாயார், இல்லத்தரசி ராமகிருஷ்ணரின் பக்தர். பிராந்தியத்தில் பல்வேறு இடங்களுக்கு வேலை நிமித்தமாக இவரது தந்தை இடம்பெயர்ந்ததன் காரணமாக, இவர் அசாம், கூச் பெஹார் மற்றும் மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதிகளில் வளர்ந்தார். கூச் பெஹாரின் சுனிட்டி கல்வி நிலையத்தில் உயர்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். [2] [3]

தனது துவக்கக் காலத்தில், ஸ்ரீலேகா முகர்ஜியிடமிருந்து செவ்வியல் நடனமான கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டார். சாந்திநிகேதன் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியான கலா பவனில் காட்சி சார் கலைஞராகப் பயிற்சி பெற்றார். [4] இந்துஸ்தானி செவ்வியல் இசையில் தனது துவக்ககால இசை பயிற்சியை இவர் பெற்றிருந்தார். வங்காளத்திலிருந்து வந்த விசித்திரமான சிறுபான்மையினரின் பாரம்பரிய இசையை தொடருந்தில் பாடக்கூடிய, பார்வையற்ற ஒரு பாவுல் பாடகி பாடுவதை முதன்முதலில் சாந்திநிகேதன் வளாகத்தில் கேட்டார். இதைத் தொடர்ந்து வளாகத்திற்கு அடிக்கடி வந்த பாவுல் பாடகி புல்மலா தாஷியை சந்தித்தார். விரைவில், இவர் புல்மலாவிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். மேலும் பல பாவுல் ஆசிரமங்களையும் பார்வையிட்டார். பின்னர் புலாமாலா இவரிடம் மற்றொரு ஆசிரியரைத் தேடி அடையுமாறு அறிவுறுத்தினார். [5] [6] இந்த காலகட்டத்தில், மேற்கு வங்காளத்தின் பாங்குராவைச் சேர்ந்த 80 வயதான பாவுல் பாடகர் சனாதன் தாஸ் பாவுலின் ஒரு நிகழ்ச்சியை இவர் கண்டார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிவு செய்த இவர், பாங்குரா மாவட்டத்தில் சோனமுகியில் உள்ள அவரது ஆசிரமத்துக்குச் சென்றார். 15 நாட்களுக்குப் பிறகு, இவர் அவரிடமிருந்து தீட்சை பெற்றார். அவர் இவருடைய முதல் குருவானார் இவர் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, தன் குருவுடன் பயணம் செய்தார். நிகழ்ச்சிகளின் போது குரல் கொடுத்தார், பாவுல் பாடல்களைக் கற்றுக்கொண்டார், பாவுல் நடனம் கற்றுக் கொண்டார், மற்றும் எக்தாரா மற்றும் டக்கி வாசித்தார், இடுப்பில் கட்டப்பட்ட ஒரு சிறிய கெட்டில்-மக்களத்தை வாசித்தார். இறுதியாக, குரு இவரைத் தானாகப் பாட அனுமதித்தார். விரைவில் இவர் தனது அடுத்த குருவாக சஷான்கோ கோஷாய் பாவுலிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது 97 வயதாக இருந்த கோஷாய், பாங்குரா மாவட்டத்தில் உள்ள கொயர்போனி என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஆரம்பத்தில் ஒரு பெண் சீடரை ஏற்க தயங்கினார், இதனால் சில நாட்கள் இவரது அர்ப்பணிப்பை சோதித்துப் பார்த்தார். அவரது வாழ்க்கையின் மீதமிருந்த மூன்று ஆண்டுகளில், அவர் பல பாடல்களையும், பாவுல் பாரம்பரியத்தின் சூட்சுமங்கள்ளைக் கற்றுக் கொடுத்தார். [1] [2] [3]

தொழில்[தொகு]

1995 ஆம் ஆண்டில் இவர் நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளூர் ஆன்மீக மற்றும் நாடக மரபுகளைப் பற்றி அறிந்து கொண்டார். கேரளத்தைச் சேர்ந்த பாரம்பரிய கைப்பாவைக் கலைஞரும், கையுறை பொம்மலாட்டங்கள் அல்லது பாவா கதகலியையும் செய்பவரான ரவி கோபாலன் நாயரை சந்தித்தார். [7] 2000 ஆம் ஆண்டில் அவருடன் அமெரிக்காவின் வெர்மான்ட்டில் உள்ள பிரெட் அண்ட் பப்பட் தியேட்டருக்குப் பயணம் செய்தார், படைப்பாளி பீட்டர் ஷுமனுடன் ஆய்வு செய்தார். இது பொம்மலாட்டம், நேரடி-கலை ஆகியவற்றை நாடக நிகழ்ச்சிகளில் இணைப்பதில் பெயர் பெற்றது. [8] முன்னதாக இவர்கள் செவன் பேசிஸ் நீட்ஸ் கண்காட்சி மற்றும் ஜெர்மனியின் ஹனோவரில் நடந்த எக்ஸ்போ 2000 நிகழ்ச்சிகளில் ஐந்து மாதங்கள் தியேட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். திருவனந்தபுரம், இவர் அப்துல் சலாம், என்ற ஒரு முஸ்லீம் பக்கிரி கலந்தரை சந்தித்தார். அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அவர் பாரம்பரியத்தின் ஆன்மீக அர்த்தத்தைப் பற்றி இவருக்குக் கற்றுக் கொடுத்தார். [1]

போபாலில் பாரதி பவனில் 2017 ஆண்டைய நிகழ்ச்சியில் பார்வதி பாவுல்
பார்வதி பாவுல் இசை நிகழ்ச்சியில்

இதன் பிறகு, 2001 இல், இவர் முழு நேரத்தையும் பாவுல் மரபுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். இதன்படி இச்தாரா மற்றும் டகியை இசைக்கருவிகளை வாசித்தபடியும், கால்களில் சலங்கைகளை அணிந்தும் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். இவர் பாரம்பரியமான பாவுல் திறமையுடன் ஆன்மிகச் சார்பான பாடல்களை பாடுகிறார். பாடல்களைப் பாடும்போது சில சமயங்களில் ஆங்கிலத்தில் விளக்கமளிக்கும் உரைகளைச் சேர்ப்பதன் மூலம் இவரது நடிப்புடன் கதைகளைப் பாடினார். [1] [2] [3] ஷூமானுடனான ஒரு படைப்பால் ஈர்க்கப்பட்ட இவரது சில நிகழ்ச்சிகளில், இவர் தனது பாடலுடன் பெரிய ஓவியங்களை வரைகிறார். இவரது பாடல்களின் கருப்பொருள்களை ஒரு நேரடி செயல்திறன் கலையாக விளக்குகிறார். [9]

1990 களின் பிற்பகுதியில், இவர் தனது ஆசிரியர் ரவி கோபாலன் நாயரை மணந்தார். கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டில் "ஏக்தாரா பாவுல் சங்கீதா கலரி" என்ற பாவுல் இசை குருகுலத்தை (பள்ளி) நடத்தி வருகிறார். [6] ஆயினும்கூட, வங்காளத்தின் பாரம்பரிய பாவுல் பாடகர்களைப் போலவே, கேரளத்தின் தொலைதூர கிராமங்களிலும், இவரது சொந்த பூமியான வங்காளத்திலும் இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார். [1][7] ஆண்டுக்கு ஒருமுறை, இவர் சர்வதேச பள்ளியான தியேட்டர் ஆந்த்ரோபாலஜி (ஐ.எஸ்.டி.ஏ) இல் பாவுல் இசையை கற்பிப்பதற்காக பயணம் செய்கிறார். 2005 ஆம் ஆண்டில், இவர் பாவுல் மரபுக்குள் பயணித்தது குறித்து சாங்ஸ் ஆஃப் தி கிரேட் சோல் என்ற புத்தகத்தை வெளியிட்டார், இது ஒரு படித்த பெண் மரபுக்குள் நுழைவதைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்குகிறது.

பல ஆண்டுகளாக, ருஹானியாட் - அகில இந்திய சூஃபி & ஆன்மிக இசை விழா மற்றும் நூறு கோடியினர் கிளர்ச்சி உள்ளிட்ட இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். [10] [11] [12]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Bengal folk meets Kerala's spirituality in Parvathy Baul's music". CNN-IBN. 9 November 2012. Archived from the original on 14 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 Academy, Himalayan (January–March 2013). "Sacred Arts: Poetess and Minstrel, Parvathy Baul Lives and Dances in her Beloved's Divine Heart". Hinduism Today Magazine. Archived from the original on 29 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  3. 3.0 3.1 3.2 K.K. Gopalakrishnan (25 December 2005). "A storyteller on a mission". The Hindu. Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  4. "Baul is not just music, it's a way of life: Parvathy Baul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 February 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  5. "Blissfully Baul". 27 September 2006. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 Bhawani Cheerath (26 September 2008). "Baul music charts mental routes". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  7. 7.0 7.1 "Exceptional skill, one couple". The Hindu. 17 March 2006. Archived from the original on 23 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  8. Nagarajan, Saraswathy (14 September 2012). "Play of puppets". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  9. . 
  10. "A treat for Sufi music lovers". The Times of India. 27 November 2010. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  11. Subhra Mazumdar (3 February 2014). "Rise4Justice Blog: India: Parvathy Baul Sings For Love And Peace". One Billion Rising For Justice. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  12. "Parvathy Baul brings exhilarating spiritual music to Vancouver". Vancouver Observer. 2 August 2011. Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_பாவுல்&oldid=3775394" இலிருந்து மீள்விக்கப்பட்டது