பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர் மாவட்டம்
அமைவு:பரங்கிப்பேட்டை கடலூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:முத்துக்குமரர், முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்

பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி கோயில் என்பது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை யில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.

திருவிழா[தொகு]

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

நடை திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]