பயனர் பேச்சு:Balamurugan G

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Balamurugan G, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரவி (பேச்சு) 07:04, 6 மார்ச் 2013 (UTC)

வணக்கம், Balamurugan G!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


நீங்கள் இட்டிருந்த செய்தியை உங்கள் பயன்பாட்டுக்காக கீழே இட்டுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:04, 6 மார்ச் 2013 (UTC)

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் கலைத்திறனுக்கு சான்றாக திகழ்ந்து வருவது நாம் அனைவரும அறிந்ததே. சமீபத்தில் ஆயிரமாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த சமயத்தில் அனைவரும் மறந்துபோன, முக்கிய ஆளுமையாக சோழர்களுக்கும், இன்று வரை தமிழர்களுக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சித்தர் கருவூறார் அவர்களையும் அவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினையும் வெளிப்படுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். தமிழர்களின் வரலாறு ,சமயம், கலை மற்றும் இலக்கியம் அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இனக்குழுக்களால் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டிருகின்றன. இந்த தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இடைக்கால சோழர்களின் வரலாறு முதலாம் விசயாலயன் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. பாண்டிய நாடு பல்வேறு காரணங்களால் நசிந்த போது பொதிகை மலையில் தவமிருந்து கொண்டிருந்த சித்தர் கருவூறார் தமிழினத்தை மீட்டுருவாக்கம் பண்ண முடிவெடுத்து மதுரை வருகிறார். மதுரை இருந்த நிலைமை சரியில்லாததால் அதை தவிர்த்து தஞ்சம் புகுந்த ஊர் தான் தஞ்சை. முதலாம் விசயாலயன், சித்தர் கருவூறார் அவர்களின் பெருமுயற்சியால் தமிழினம் முன்னேற, தமிழனின் பெருமையை உலகுக்கு அறிவிக்க ஒரு பேரரசு நிர்மாணிக்க தேவைப்பட்ட வாரிசு. முதலாம் விசயாலயன் சித்தர் மகள் சோழிஆயிக்கும் கரூர் பசுபதி கோயிலில் பூசாரியாக இருந்த காகுந்தனுக்கும் பிறந்தவன். சோழிஆயி, கரூரை அடுத்த முடிகனம் என்ற ஊரை சேர்ந்த சித்தர் மகள். கருவூறாரின் வேண்டுகோளுகிணங்க காகுந்தனை மணமுடிக்க ஒப்புக்கொண்டார். சித்தர் கருவூறாருக்கு அளித்த வாக்கின்படி விசயாலயனை பெற்று எடுத்த பிறகு மீண்டும் காட்டுக்கே தவத்திற்காக சென்று விட்டார். சித்தர் மகள் சோழிஆயிக்கு கரூர் அருகே கோயில் உள்ளது.சித்தர் கருவூறார் விசயாலயனுக்கு எல்லா விதமான பயிற்சிகளும், போர்கலைகளும், அரசியலும் கற்று தந்தார். முதலாம் விசயாலயன் முதல் ராஜராஜசோழன் வரை இவர் அரசகுருவாக இருந்து சோழப்பேரரசை நிர்வாகித்தார் . இவர் தனது காலத்தில் தஞ்சை பெரிய கோயில் மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தில் இப்போதும் இருக்கக்கூடிய பல கோயில்களை கட்டுவதற்கு மூல காரணமாக இருந்தார். மேலும் இவர் அனைத்து கலைகள்,போர்பயிற்சிகள்,அரசியல் அமைப்பில் உலகிலயே முதன் முதலாக குடவோலைஎனப்படும் முறை, மருத்துவ முறைகள் என பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்தினார் இன்று அனைத்து கலைஞர்களாலும் அனைத்து நாட்டை சேர்ந்த சிற்ப வல்லுனர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் நடராஜ திருமேனி இவரால் உருவாக்கப்பட்டதே. இவர் பலமுறை உலகம் சுற்றி வந்து இருக்கிறார் இதனால் பலநாட்டு மன்னர்களின் தொடர்பும் பல செல்வந்தர்களின் வாணிப தொடர்பும் சோழ அரசை வலுவாக்க உதவி இருக்கிறது. இதற்கு சான்றாக இன்றும் இவரது அயல்நாட்டு நண்பர் ஒருவரின் உருவம் புடைப்பு சிற்பமாக தஞ்சை கோயிலில் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயிலில் காலர் வைத்த சட்டை தொப்பி அணிந்த உருவம் செதுக்கப் பட்டிருப்பது வியப்பாகவும், தமிழனின் நட்புணர்வுக்கும், உலகளாவிய தொடர்புக்கும் சான்றாக திகழ்கிறது. தீர்க்க தரிசனத்தால் வெள்ளையர் வரப்போவதை அறிந்து முன்னமே இச்சிற்பத்தை நிறுவியதாக கூறுபவர்களும் உள்ளனர். உலகிலேயே ஒரு சமூகத்திற்கு அதன் பணி நிமித்தம் தகுந்த பெயர்களை சூட்டினார். 1984 அருமையான தமிழ் பெயர்களை தனது தமிழின மக்களுக்காக அவர்களின் வேலை, சாதனை, செயலாற்றல் இவற்றின் அடிப்படையில் அவர் சூட்டினார். அந்த பெயர்கள் எல்லாம் பின்னர் தனித்தனி சாதியாகி விட்டது. இவர் வழங்கிய பெயர்களை ஆராய்ந்தோமானால், அதை தற்போதைய தமிழ் இனத்துக்கு பாங்காக விளக்கிநோமானால் சாதி சண்டைகள் அறவே ஒழிந்திடும். தமிழ் சமூக ஆர்வலர்கள் இதை செய்தால் நன்று. தமிழ் மொழி, அதன் சிறப்பு, அதிலேயே அனைத்தும் கற்பதற்கு வழிமுறைகள், ஒற்று அறிதலுக்கான ரகசிய குறிகள் மற்றும் வார்த்தைகள், கடல் பயணங்கள், போர்கள் சார்ந்த பயிற்சி குறிப்புகள், தகவல் பரிமாற்றங்கள், வானியல் அறிகுறிகள்,உலோக சிலை இலக்கணங்கள் (ICONOGRAPHY jewelery,) என்று பல விசயங்களை தமிழிலேயே எழுதியும் பேசியும் ஒரு பேரரசை நடத்தியவர் சித்தர் கருவூறார் . இன்று நாம் நமது மொழியை எந்த அளவு கொன்று கூறு போடும் கல்வி முறையை வைத்திருக்கிறோம் என்று பார்த்தால் வயிறு எரிகிறது. ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் கோயிலைக கட்டி வைத்து விட்டு இன்று பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்நிய நாட்டு பொறியியல் கல்வியை படித்துகொண்டிருக்கிறோம். சோழர் ஆதிக்கத்தில் வந்த பல நாடுகள் தமிழர்களுக்கோ அல்லது இந்து மதத்திற்கோஅல்லது தங்களின் வணிகத்திற்கோ ஊறு விளைவிக்க முற்பட்டவையே. தமது இனத்திற்கு அல்லது மதத்திற்கு இன்னல் ஏற்படும் போதெல்லாம் உடனே அதை களைந்திட முற்பட்டவர் சித்தர் கருவூறார். இன்றோ நமது மீனவர்கள் பிற நாட்டவர்களால் துன்புறும்போதும் கவலை கொள்ளாத அரசை காண்கிறோம் தமிழினம் அல்லல்படுவதை எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களை காண்கிறோம்.வடநாட்டில், இந்து கோயில்கள் எல்லாம் கஜினி முஹம்மது போன்ற முகலாயர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட போது ராஜராஜனையும் ராஜேந்திரனையும் அனுப்பி நமது கோயில் கலை செல்வங்களை காத்தவர். வருங்காலத்தில் வரும் அரசுகள் தமது மக்களுக்கு தண்ணீருக்கு வழி செய்யுமோ செய்யாதோ என்று எண்ணி சித்தர் கருவூறார் கட்டிய நீர் தேக்கங்கள் பலப்பல. பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு பாசனம் செய்யும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஏரிகள் கட்டியதால் தான் இன்றும் தஞ்சை தமிழர்களுக்கு சோறு போடுகிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் இவரது எண்ணமும் உழைப்பும் இருக்கிறது. வானியல் அறிஞர் பலநாடுகளில் இருந்த போதும் இவர் போல் கிரகங்கள் தங்களின் முழு ஆதிக்கத்தை எங்கே செலுத்துகின்றன என்று ஆராய்ந்தவர் எவருமில்லை. இவரது முயற்சியில் தான் தஞ்சையை சுற்றி நவகிரக கோயில்கள் எழுப்பப்பட்டன. இவருக்குப்பின் இவரது மகன் கருவூர்த்தேவரும் இவரைப்போன்றே கங்கைகொண்ட சோழபுரமும் அதையொட்டிய சோழப் பொன்னேரியும் உருவாக காரணமாக இருந்தார். கருவூர்த்தேவரும் அவரது மகன் திருமாளிகை தேவரும் இயற்றிய பாடல்கள் பன்னிரு திரு முறைகளில் ஒன்பதாம் திருமுறையில் வருகின்றன. சித்தர் கருவூறாரைப் பற்றி பொதுவாக ஊடகங்களில் வரும் செய்திகள் பலவும் கற்பனையாகவும் இவரை ஒரு மாயாவி போலவும் காட்டுகின்றன. தமிழனுக்கு அதுதான் பிடிக்கும் என்று அவர்கள் நினைகிறார்களோ என்னவோ. நம் தமிழ் இனத்துக்கு இவர் ஆற்றிய பணிகள் எவ்வளவோ இருக்க இந்த கற்பனை மற்றும் செவி வழி செய்திகளால் ஒருபயனும் இல்லை என்று அவர்கள் உணரட்டும். பலரும் நினைப்பது போல்,இவரும் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சமாது கொண்டிருக்கும் கருவூறாரும் ஒருவரில்லை. சித்தர்நெறிப்படி கரூர் கோயிலில் சமாது கொண்டிருப்பவர் இவருக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர். "வங்கம் பெரு கடல் எங்கும் பொருதிரை " என்ற அருணகிரி நாதரின் திருப்புகழ் மூலமாக வங்கம் எனபது படகு அல்லது கடலில் செல்லும் வாகனம் என்ற பொருள் இருப்பதை அறியலாம். வங்கம் எனும் சோழர்களின் கப்பல் அல்லது படகுகள் அடிக்கடி கடலினுள் பாய்வதால் அந்த கடலுக்கே வங்கக்கடல் என்று பெயர் ஏற்பட்டது. முதலாம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு கப்பற்படை இந்து மாக்கடலில் இன்றைய மொரிசியஸ் தீவிற்கு தென்மேற்கே இருநூறு மைல் தொலைவில் உள்ள ரீயூனியன் தீவிற்கு சென்றது. அத்தீவில் உள்ள எரிமலைகள் மற்றும் நில அமைப்புகள் தங்களுக்கு உதவாது என்று முடிவு செய்து அதற்க்கு "தீமைத்தீவு " என்று பெயரிட்டு அடுத்த பயணத்தை தொடங்கியது. இதை 1050 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கல்வெட்டில் காணலாம்.சீனாவின் டாங் வம்சம், மலாய் தீவு கூட்டத்தை ஆட்சி செய்து வந்த ஸ்ரீ விஜயப்பேரரசு, பாக்த்தாத்தின் அப்பாசிட் கலிபா அரசு ஆகியன சோழ பேரரசின் முக்கியமான வணிக தொடர்பு மையங்களாகும். 1077 -ல் சீனாவை சேர்ந்த சாங் வம்சகுறிப்பு சோழ வணிக குழு ஒன்று சீன அரசவைக்குச் சென்றதைப்பற்றி குறிக்கிறது. நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் என்ற சோழ வணிக குழு சுமத்ரா தீவில் வணிகம் செய்ததை அந்நாட்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. சோழர்களின் கடல் பயணங்கள் மிக விரைவாகவும் நுட்பமாகவும் அமைந்தமைக்கு சித்தர் கருவூறாரின் கடல் மற்றும் கப்பல் பற்றிய பொறியியல் அறிவுமே காரணம்.கடலில் செல்வதற்கு இவர் சோழர்களுக்கு எந்திரம் பொருத்திய கப்பல்களை தரவில்லை மாறாக புது முறையிலான பாய்மரக்கப்பல்களை தந்தார். நீரோட்டத்தையும் காற்றின் போக்கையும் வைத்தே கப்பல்களை வேகமாக செலுத்தும் முறையையும் தந்திட்டார். வானியல் அறிஞராக இருந்திட்ட காரணத்தால் விண்மீன்களை கணக்கிட்டே கப்பல்களை செலுத்தும் முறையையும் சோழர்களுக்கு கற்று தந்திட்டார். சோழர்கள் காலத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில், கௌவெள்ளி பலகை என்ற இராப்பலகை, டப்புப் பலகை ஆகியவை பயன்படுத்தப்பட்டன இவற்றை ஆரய்ந்து பார்த்த பேராசிரியர் பா. அருணாசலம் அவர்கள் இக்கருவிகள் தரும் முடிவுகள் தற்கால நுண் கருவிகள் தரும் முடிவுகளை போன்றே இருக்கின்றன என்கிறார். ஸ்பானியர்கள், போர்த்துகீசியர்கள், ஜெர்மானியர்கள், இன்னபிற ஐரோப்பியர்கள் தங்களது இருண்ட காலத்தில் இருந்த போது சோழர்கள் கடல் பயணத்திலும் கட்டுமான அறிவியலிலும் உச்சத்தில் இருந்ததை நம் தமிழ் சமுகம் புரிந்து கொள்ளவேண்டும். உலகம் சுற்றி வந்த மெகல்லன் கி.பி 1519 ஆம் ஆண்டு தான் கடல் பயணம் மேற்கொள்ளுகிறார், கொலம்பஸ் கி.பி. 1492 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவை கண்டுபிடிக்கிறார். நம் தமிழர் இவர்களுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தை சுற்றி வந்தனர் எனபது பெருமைக்குரிய செய்தி. போரில் வெற்றி அடைந்து செல்வதையும் வியாபாரத்தையும் நமது மதம் மற்றும் தத்துவம் அது சார்ந்த கலைகள் ஆகியவற்றை வளர்ப்பதுவே கருவூறார் சோழர்களுக்கு சொல்லித்தந்த பாடம். இதனால் சோழர்கள் பலநாடுகளுக்கு படையெடுத்து வெற்றி பெற்றாலும் எந்த ஒரு நாட்டிலும் ஏகாதிபத்திய ஆட்சி அமைத்திட முயற்சிக்கவில்லை. ஒருவன் அல்லது ஒரு சமூகம் வெற்றி அடைய, வெற்றியை தக்கவைத்து கொள்ள அவனது தாய்மொழியை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும், மதித்து நடத்தல் வேண்டும் என்பதை கருவூறார் சோழர்களுக்கு நன்றாக புரிய வைத்து இருந்தார். முதலாம் ராஜேந்த்ரனுக்குப் பிறகு இந்த புரிதல் மிக மிக குறைவாகப் போனதால் சோழர் தங்கள் வலிமையை இழந்தனர். அது இன்று வரை நீடிக்கிறது. எண்பது டன் நிறையுள்ள கலசம் தஞ்சை கோபுரத்தை அலங்கரிக்கிறது. இது தமிழ் சமுகத்தின் கட்ட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுவே சித்தர் கருவூறார் செய்த கடைசி பணியாகும்.சித்தர் கருவூறார் தம் கண்ணென வளர்த்த சோழ பேரரசு ராஜராஜன் காலத்தில் மெல்ல மெல்ல பிற நாட்டு கலாசார தாக்கத்தால் மொழி ஊடுருவல், அடிமை முறை, சாதி ஏற்ற தாழ்வுகள், தீண்டாமை, லஞ்சம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் போக்கு, வறுமையின் காரணமாக தன்னைத் தானே விற்றுக்கொள்ளுதல்,அடிமை தீண்டத்தகாதவராக இருந்தால் "தீண்டா அடிமை" எனப்படும் அளவுக்கு சாதி பாகுபாடு, வரிச்சுமை, கோயிலில் கலை தொண்டு செய்ய ப்ணிக்கப்பட்ட தேவரடியாள்கள் மீது பாலியல் சுரண்டல்கள் என பல விஷயங்கள் தலை எடுக்க ஆரம்பித்தன. கருவூறார் ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ ஏற்று நடக்கக்கூடிய அளவில் ராஜராஜனும் இல்லாததால் இருவருக்குமிடையே கருத்து மோதல்களும் பிளவும் ஏற்பட்டது .இவர் பங்குனி மாத முழு நிலவுநாளில் தனது மனைவி தாய்லாந்து நாடு இளவரசி பொன்னிறபாவையுடன் தஞ்சை கோயிலிலேயே உள்ள நிலவறையில் சென்று நீள் தவத்தில் ஆழ்ந்திட்டார் . தமிழுக்காக, தமிழரின் மூல மதமாம் சைவதிற்க்காக, தமிழ் சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணியை அனைத்து அமைப்புகளும், கட்சிகளும், சாதிய அமைப்புகளும் ஏனோ மறந்து விட்டன. பல அமைப்புகள் இவரைப்பற்றி தெரிந்தும் பேச மறுப்பதற்கு காரணம் அவர்கள் நாத்திகவாதிகளாக இருப்பதுதான். நாத்திக கண்ணாடியை போட்டுக்கொண்டு இவர்கள் தமிழர்களின் வரலாற்றை எவ்விதம் பார்க்க முடியும். சோழப்பேரரசின் வலிவும் பொலிவும் தமிழை நம்பியதால் இந்து தர்மத்தை நம்பியதால் ஏற்ப்பட்டது. அதற்க்கு காரணம் சித்தர் கருவூறார் என்ற முக்கிய ஆளுமையே." தமிழர்கள் நாம் அனைவரும் தஞ்சை செல்லவேண்டும் அங்கு தமிழின தந்தையாகிய சித்தர் கருவூறார் சந்நிதிக்கு சென்று அவருக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balamurugan_G&oldid=1339889" இலிருந்து மீள்விக்கப்பட்டது