பயனர் பேச்சு:கண்ணம்மா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், கண்ணம்மா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கு. அருளரசன் (பேச்சு) 05:16, 7 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பயனர்:கண்ணம்மா/மணல்தொட்டி[தொகு]

வணக்கம். உங்களின் பதிவு முழுமையாகத் தவறு. எனவே, தமிழின் ெசம்ெமாழிப் பண்புகள் என்ற தவறான தலைப்பில் இருந்த அனைத்துத் தரவுகளையும், பயனர்:கண்ணம்மா/மணல்தொட்டி என்ற உங்களின் பயிற்சிப் பக்கத்திற்கு மாற்றியுள்ளேன். ஏனெனில், தலைப்பிலும் எழுத்துப்பிழை உள்ளது. மேலும் உள்ளீட்டத் தகவல்களும் கலைக்களஞ்சிய வடிவத்தில் இல்லை. பொதுவாக இதுபோல இருந்தால் கட்டுரையை நீக்குவது வழக்கும். உங்களின் முதல் முயற்சி என்பதால், மணல்தொட்டிக்கு மாற்றியுள்ளேன்.

உங்கள் தலைப்புக்கு தொடர்புடைய கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. எடுத்துக்காட்டு, செம்மொழி, செம்மொழி விருது இதுபோன்ற கட்டுரைகைள ஒருமுறை வாசிக்கவும். அதில் உரிய மாற்றங்களை இட கற்றுக்கொள்ளுங்கள். புதிய கட்டுரையை எழுத விரும்பினால், உங்கள் கணக்கினுள் நுழைந்த பிறகு, மேலே முதல்வரியில், உங்கள் பெயருக்கு அடுத்துள்ள மணல்தொட்டி பகுதியில் எழுதி பிறரின் உதவியை நாடவும். மேலுள்ள வரவேற்புரையில் தந்துள்ள பக்கங்கள் உங்களுக்கு உதவும். மனதில் தோன்றும் கட்டுரையாக்கத்தினை எழுதுவதைத் தவிர்த்து, விக்கிப்பீடிய நடைமுறையைப் பின்பற்றுங்கள். பொதுவாக எக்கட்டுரை தவறாக இருந்தாலும், அவற்றை நீக்குவது வழக்கம். நீங்க்ள உணர, உங்கள் மணல்தொட்டிக்கு/உங்கள் பயிற்சிப் பக்கத்திற்கு மாற்றியுள்ளேன். தொடர்ந்து நம் மொழிக்காக புரிந்து, எங்களுடன் செயற்பட கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 06:58, 7 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கண்ணம்மா&oldid=3841187" இலிருந்து மீள்விக்கப்பட்டது