பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாதவர் (அகிர்)
மொழி(கள்)
இந்தி, பிராஜ் பாஷா
சமயங்கள்
இந்து

பதக் (Phatak) அல்லது பாதக் என்பது யாதுவன்ஷி குலம் அல்லது இந்திய யதுவன்சி - யாதவ் சமூகத்தின் துணை சாதி ஆகும்.

தோற்றம்[தொகு]

விரஜபூமி என்பது உத்தரப் பிரதேசத்தின் மதுரா, ஷிகோஹாபாத், ஜலேசர், ஆக்ரா, ஹத்ராஸ், அலிகர், எட்டா, மைன்புரி மற்றும் பரூகாபாத் மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்தியம் ஆகும்.[1] பாதாக்கள் என்பவர்கள் யாதவ் (அகிர்) குலத்தினர் ஆவர்.[2] பாதக் குலத்தினர், யதுவன்ஷியான மஹாபனின் ராஜாவான திக்பால் பால் சிங்கின் வழிவந்தவர்கள் என்று கூறுகின்றனர். 

முன்னர் ஒருமுறை சித்தூர் அரசபப்குதியினுள் தில்லியின் பேரரசர் படையெடுத்து நுழைந்தார். நகரின் 12 வாயில்களில் (பாதக்சு) ஒரு வாயிலில் மட்டும் எதிர்ப்புக் காணப்பட்டது. இந்த 12வது வாயிலினைக் காத்து நின்ற காவலர் கத்ரா. காவலர் கத்ராவின் துணிச்சலின் அடையாளத்தை நினைவுகூரும் வகையில், இவர்களும் இவர்களின் சந்ததியினரும் என்றென்றும் பாதக் என்ற பெயரால் அறியப்பட வேண்டும் என்று அரசர் ஒரு ஆணையை வெளியிட்டார்.[2]

வரலாறு[தொகு]

பாதக் இளவரசர் பிஜய் சிங் சமோகன் சௌராசி பகுதியைக் கைப்பற்றினார். 1106-ல் (சம்வத் சகாப்தம்) நிலத்தின் மேவாதிகளின் உரிமையாளர்களை வெளியேற்றினார். சமோகன் சௌராசி பகுதியைக் கைப்பற்றிய பிறகு, பதக்குகள் யமுனை ஆற்றினை நோக்கிச் சென்றனர். பூர்வ குடிகளை வெளியேற்றி இவர்கள் ஷிகோஹாபாத் பர்கானா முழுவதிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.[3]

பெண் சிசுக்கொலை சௌகான் ராஜபுத்திரர்கள் மற்றும் பதக் யாதவர்களிடையே பொதுவாக நடைமுறையிலிருந்ததை ஆதாரங்கள் காட்டுகின்றன.[4][5] 1865ஆம் ஆண்டில், கொல்வின், மைன்புரியில் உள்ள சௌகான் மற்றும் பாதக் கிராமங்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கவனித்து, ஒரு பெண் குழந்தை கூட இல்லாத ஆறு கிராமங்களைக் கண்டறிந்தார்.[6]

1857 கலகம்[தொகு]

மைன்புரி மாவட்டத்தில், அரசாங்க அதிகாரத்தைச் சீர்குலைக்கும் தேசிய முயற்சியாக எந்த ஒரு தீவிரமான பங்கேற்பும் கவனிக்கப்படவில்லை. பிரித்தானிய அதிகாரிகள் "மெயின்புரியில் விவசாய சமூகங்கள் பெருமளவில் எழுச்சி பெறவில்லை” என்பதையும் சௌகான்கள் மற்றும் அகிர்கள் ஆகிய நிலவுடைமை சாதிகளுக்கு இடையேயான ஆதிக்கத்திற்கான போராட்டம் உள்ளதையும்" கருத்தில் கொண்டனர்.[7][8][9]

பாரௌலின் அகிர்கள் தேஜ் சிங்கை வெற்றிகரமாக விரட்டியடித்தனர். அதே சமயம் ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அகிர் சாதி சகோதரர்களான ராம் ரத்தன் மற்றும் பகவான் சிங் ஆகியோர் முஸ்தபாபாத் முழுவதையும் கிளர்ச்சி நிலையில் வைத்திருந்தனர். பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடினர்.[10][9]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lucia Michelutti (2002). "Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town" (PDF). PhD Thesis Social Anthropology. London School of Economics and Political Science University of London. p. 46. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
  2. 2.0 2.1 Lucia Michelutti (2002). "Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town" (PDF). PhD Thesis Social Anthropology. London School of Economics and Political Science University of London. p. 152. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015.
  3. Lucia Michelutti (2002). "Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town" (PDF). PhD Thesis Social Anthropology. London School of Economics and Political Science University of London. p. 152. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
  4. Raj Kumar (2004). Essays on Social Reform Movements. Discovery Publishing House. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171417926.
  5. Farooqui Salma Ahmed (2011). A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century. Pearson Education India. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131732021.
  6. Subodh Kapoor (2002). The Indian Encyclopaedia: Mahi-Mewat. Genesis Publishing Pvt Ltd. p. 4506. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788177552720.
  7. Biswamoy Pati (2007). The 1857 Rebellion. Oxford University Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195690767.
  8. Edmund Leach; S.N. Mukherjee (1970). elites in south asia. CUP Archive. p. 30.
  9. 9.0 9.1 Pati, Biswamoy, ed. (2007). The 1857 rebellion (in ஆங்கிலம்) (2. impr. ed.). New Delhi: Oxford University Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195690767.
  10. Edmund Leach; S.N. Mukherjee (1970). elites in south asia. CUP Archive. p. 31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதக்&oldid=3505020" இலிருந்து மீள்விக்கப்பட்டது