பெண் சிசுக் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெண் சிசுக் கொலை என்பது ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதாகும். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது பரவலாக நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிதமாக நடைபெறுகிறது.

[தொகு] காரணங்கள்

பல ஆசிய சமூகங்கள் ஆண் ஆதிக்க சமூகங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆண்கள் கூடுதலாக பண்பாட்டு, அரசியல், பொருளாதார வழிகளில் மதிக்கப்படுகிறார்கள். மேலும் பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது கூடிய பல தடைகளைக் கொண்டது. இதனால் பல பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள்.

[தொகு] சட்டம்

இது அனைத்து நாடுகளிலும் பெரும் தண்டனைக்கு உரிய குற்றம் என்றாலும், கருக்கலைப்பது, சிசுக் கொலை போன்றவற்றை கண்டுப்பிடிது தண்டிப்பது நடைமுறையில் மிக அரிதாகவே நடைபெறுகிறது.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_சிசுக்_கொலை&oldid=675253" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி