பண்பாட்டு அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்பாட்டு அடையாளத்தை குறித்தபாணி உடைகளின் மூலம் அல்லது அதுபோன்ற பிற அழகியல் குறிகாட்டிகள் மூலம் வெளிப்படுத்தலாம்

பண்பாட்டு அடையாளம் (Cultural identity) என்பது, நாட்டினம், இனம், மதம், சமுதாய வகுப்பு, தலைமுறை, இடம் தனக்கெனத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயக் குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர் என்று ஒருவருக்கு ஏற்படும் உணர்வையோ அடையாளத்தையோ குறிப்பதாகும்.[1] இந்த வகையில், பண்பாட்டு அடையாளம் என்பது ஒரு தனிமனிதனின் இயல்பும், ஒரே பண்பாட்டைப் பகிர்ந்துகொள்ளும் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் இயல்பும் ஆகும்.

விளக்கம்[தொகு]

பல்வேறு நவீனப் பண்பாட்டு ஆய்வுகளும், சமூகக் கோட்பாடுகளும் பண்பாட்டு அடையாளம் குறித்து ஆராய்ந்துள்ளன. அண்மைக் காலத்தில், ஒரு புது வடிவிலான அடையாளப்படுத்துதல் உருவாகியுள்ளது. இது, தனிமனிதன் என்பதை, ஓரியல்பான முழுமை பெற்ற ஒன்று என்பதில் இருந்து பல பண்பாட்டு அடையாளங்காட்டிகள் சேர்ந்த ஒரு தொகுதியாக உடைத்துக் காண்கிறது. இப்பண்பாட்டு அடையாளங்காட்டிகள், அமைவிடம், பால், இனம், வரலாறு, நாட்டினம், மொழி, மத நம்பிக்கை, இனக்குழு, அழகியல், உணவு போன்ற பல்வேறு நிலைமைகளின் விளைவாக இருக்கலாம்.[2]

மேற்கோள்[தொகு]

  1. Moha Ennaji, Multilingualism, Cultural Identity, and Education in Morocco, Springer Science & Business Media, 2005, pp.19-23
  2. Manufacturing Taste: TheWalrus.ca
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_அடையாளம்&oldid=3110231" இலிருந்து மீள்விக்கப்பட்டது