பட்டுத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டுத்துறை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பட்டுத்துறை (Pattuthurai) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது 1956-ல் தோன்றியது. இது சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் வட்டத்தில் உள்ளது. தலைவாசல் எனும் (ஊராட்சி ஒன்றியம்) ஊருக்கு மிக அருகில் (2 கி.மீ.) உள்ளது.

தொழில்[தொகு]

இங்குள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து சிலர் துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தமாகச் சென்றுள்ளனர். சிலர் இயந்திர கலப்பை, சுமை ஏற்றும் வண்டி, நெல் அறுவை இயந்திரம், சோளம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்.

கோழிப்பண்ணை[தொகு]

சிவசங்கராபுரம் என்பது இந்த ஊரின் ஒரு பகுதியாகும். இங்கு கோழிப்பண்ணைகள் நிறைய உள்ளன. சேலம் மாவட்டத்தில் அதிக அளவு கோழிப்பண்ணை உள்ள பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்று. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கோவில்கள்[தொகு]

  1. மாரியம்மன் கோவில்
  2. வினாயகர் கோவில்
  3. பெருமாள் கோவில்
  4. புதுப்பட்டி மாரியம்மன் கோவில்
  5. சப்பானி கோவில்
  6. செல்லியம்மன் கோவில்
  7. கருப்பையா கோயில்

மற்றும் சில கோவில்கள் உள்ளன.

பேருந்துகளும் வழித்தடங்களும்[தொகு]

  1. 12-ம் எண் பேருந்து (ஆத்தூர் - ஊனத்தூர்)
  2. 34-ம் எண் பேருந்து (ஆத்தூர் - பொன்னொளிநகர்)
  3. 17-ம் எண் பேருந்து (ஆத்தூர் - தலைவாசல் (மணிவிழுந்தான் வழியாக)
  4. இரவிக்குமார் தனியார் பேருந்து (ஆத்தூர் - ஊனத்தூர்)

தொடர்வண்டி சேவைகள்[தொகு]

பட்டுத்துறை வாசிகள் அருகில் 1 கி.மீ. க்கும் குறைவான தூரத்திலுள்ள தலைவாசல் தொடர்வண்டி நிலையத்தை தொடர்வண்டி உபயோகத்திற்கு உபயோகப்படுத்துகிறனர். மின்சார தொடர்வண்டி வழித்தடமாக இவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்வண்டிகள் இங்கிருந்து:

  1. விருத்தாசலம்-சேலம் சாதாரண வண்டி
  2. சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்

(இது இங்கு நிற்கும் வசதி இன்னும் இல்லை. அருகிலுள்ள சின்னசேலம், ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பயன்படுத்தலாம்). இவ்வூர் தண்டவாளம் வழியாக நிறைய சரக்கு வண்டிகள் செல்கின்றன.

தொழில் கட்டிடங்கள்[தொகு]

  1. மளிகை கடைகள் - 7
  2. இரும்பு பட்டறைகள் - 1
  3. சைக்கிள் கடை - 1

அரசு கட்டிடங்கள்[தொகு]

  1. கிராம நிர்வாக அலுவலர் அலுவகம்
  2. கூட்டுறவு பால் விற்பனைக் கடை
  3. நியாய விலைக் கடை
  4. அஞ்சல் நிலையம்
  5. நூலகம்
  6. பள்ளிக்கூடம்

கல்வி நிலை[தொகு]

இங்கு ஒரு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. ஏழை குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை இங்கும் மேல்நிலை படிப்புகளை அருகிலுள்ள தலைவாசல் மற்றும் தேவியாக்குறிச்சி அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். சிறிது பண வசதி படைத்தவர்களின் குழந்தைகள் அருகில் தேவியாக்குறிச்சியிலுள்ள தாகூர், மாருதி, பாவேந்தர் ஆகிய தனியார் பள்ளிகளிலும், நத்தக்கரையிலுள்ள லிட்டில் ஃபிளவர், முத்தமிழ் ஆகிய தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர். இளைஞர்கள் திருச்சி ஈ.வே.ரா, வடசென்னிமலை அறிஞர் அண்ணா கல்லூரியிலும் கல்லூரி படிப்பை பெரும்பாலும் தொடர்கின்றனர். மேலும் சிலர் தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் தொடர்கின்றனர். 40-50 % மக்கள் கல்வி அறிவு மிகுந்தவர்கள் இவ்வூர் மக்கள். இங்கிருக்கும் நூலகத்தால் மக்கள் பயனடைகின்றனர்

இயற்கை மூலங்கள்[தொகு]

இங்கு ஏறத்தாழ நூறு தெரு மின்விளக்குகள் உள்ளன. மூன்று ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இரு கை பம்புகள் உள்ளன. இவை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டவை. மக்கள் சொந்தமாக அவரவர்களுக்கு உரிய இடங்களில் வயல் நீர் பாசனத்திற்காக கிணறு வெட்டி உள்ளனர். அருகிலுள்ள வசிஷ்ட நதியின் நீர்மட்டத்திற்கு ஏற்றவாறு கிணறுகளின் நீர்மட்டம் இருக்கும். இங்கு இரு ஓடைகள் பாய்கின்றன.

பயிர்கள்[தொகு]

பெரும்பாலும் சோளம், நெல் ஆகியன பயிரிடப்படுகிறது. மஞ்சள், கரும்பு, மாட்டுத்தீவன தட்டைகள் ஆகியவைகளும் பயிரிடப்படுகின்றன. மேலும் தலைவாசலில் தினசரி காய்கறி சந்தை (காய்கறி மார்கெட் ) இருப்பதாலும் விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், வெங்காயம், முள்ளங்கி, முட்டைகோஸ், காளிபிளவர், அவரை, கறிவேப்பிலை, பாகற்காய், சுரை, புடலங்காய் போன்றவை விவசாயம் செய்கிறார்கள். இந்த காய்கறிகள் கள்ளகுறிச்சி , பன்ருட்டி, கடலூர், விருத்தாசலம், பெறம்பலூர், சங்கராபுரம் , கச்சிராயபாளையம், திட்டகுடி, பெரம்பலூர், காட்டுகோட்டை, போன்ற. வட்டார வியாபாரிகள் மொத்தமாக காய்கரிகளை கொள்முதல் செய்கிறார்கள். நவீனமாகிவிட்ட காலத்திலும் மக்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இயற்கை உரங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுத்துறை&oldid=3749187" இலிருந்து மீள்விக்கப்பட்டது