பகுப்பு பேச்சு:பரிணாம உயிரியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை படி வளர்ச்சி உயிரியல் என சொல்லலாமா? உயிரினங்கள் எவ்வாறு படிப்படியாய், தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலுறுப்பு, உடலியக்க வளர்ச்சியில் மாறுதல் ஏற்பட்டு வந்துள்ளன, வந்துகொண்டிருக்கின்றன என்பதை படிவளர்ர்சிக் கொள்கை விளக்குகின்றது. இது படி வளர்ச்சி உயிரியலில் அடங்கும் என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 15:07, 4 ஜூலை 2006 (UTC)செல்வா

பரிணாமம், பரிணாம உயிரியல் என்பவை நன்கு அறியப்படும் பெயர்கள். அவற்ரை மாற்ர வேண்டாம் என்பது என் கருத்து. எனினும் இச்சொல் மூலங்களைப் பற்றி அறிய ஆவல்--ரவி 09:37, 6 ஜூலை 2006 (UTC)
உயிரின வளர்ச்சி என்பது தோற்றம். அதன் தோற்றத்திற்கான ஆய்வுகள் இப்பொழுது மரபணு அடிப்படையில் முன்னேறிச் செல்கிறது. அதனால் பல உயிரியல் கோட்பாடுகளும், வகைப்பாட்டியல் கொள்கைகளும் வழக்கு ஒழிந்து/அருகி வருகின்றன. பொதுவாக வளர்ச்சி என்பது படிப்படியாக உருவாகக் கூடியதே. ஆகவே, தோற்றம் என்பது படிப்படியானதல்ல. அது மரபணு மாற்றத்தால் திடீரெனத் தோன்றும் தன்மையையும் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, உயிரினங்களில் தோன்றும் கலப்பினங்கள். படிவளர்ச்சியால் தோன்றியதல்ல.--≈ உழவன் ( கூறுக ) 13:47, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
இதைப்பற்றிய பழைய உரையாடல் ஒன்றைக் காணவும். மேலும் நமக்குத் திடீரென நிகழ்வதாகத் தெரியும் பெரிய மாறுதல்கள் கூர்ப்பு நிகழ்வில் மொத்தமாற்றத்தில் ஒருசிறு சிலும்பல் (பிசிறு) மட்டுமே என்பதையும் கருத்தில் கொள்ளவும், தகவலுழவன். Evolution என்பது குறிப்பிட்ட மாற்றத்தைக் (mutation) குறிக்கும் சொல்லல்ல, பலவகையான வினைகளின் ஒத்தியக்கத்தினால் நிகழும் ஒரு விளைவைக் குறிப்பது. -- சுந்தர் \பேச்சு 14:48, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
நான் தமிழகத்திலேயே படித்தவன். இச்சூழலில் படித்தவர்களுக்கு, பரிணாமம் என்ற சொல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பல இடங்களில், படிவளர்ச்சி, கூர்ப்பு என்ற சொற்கள் பயன்பாட்டில் இருப்பதைக் காண்கிறேன். தமிழகச்சூழலில், அச்சொற்கள் அதிக பலனை அளிக்காது. நான் வளர்ந்த இட மக்களுக்காக, எனது பதிவுகளை சிறப்பாக செய்ய முயலுகிறேன். அவ்வளவே. ஆங்கிலச்சொல்லைக் கொண்டு தேடியே, தமிழ்ச்சொல்லுக்கு வரவேண்டிய நிலையே உள்ளது. இதை நமது விக்கியர் ஒருவரும் கூறியுள்ளார்.(மணியம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறிய இடத்திலும் எனது எண்ணங்களை கூறியுள்ளேன். நீங்கள் கூறியதும் கூட, பரிணாம வளர்ச்சிக்காரணிகளில் ஒன்றுதானே. மரபியல் சடுதிமாற்றம்(mutation) என்பது, பரிணாமத்தை(Evolution) மட்டும குறிக்கிறது என்று நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், பரிணாமத்தில், சடுதிமாற்றத்தின் பரிமாணமும் ஒன்று. அதனால் தான் இன்று பல்வேறு துறைகளை இணைத்து பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தை புரிந்து கொள்ள முற்படுகின்றனர். எந்த துறை காரணி, எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி, பரிணாமம் வரலாறு அமைந்துள்ளது என்பதில் தான் பின்னல் உள்ளது. அதை சிக்கல் என்று நான் கூற மாட்டேன்.--≈ உழவன் ( கூறுக ) 16:06, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]
// நான் தமிழகத்தில் வளர்ந்தவன்/படித்தவன். // இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் தகவலுழவன்? நான் என்ன அண்டார்ட்டிக்காவில் வளர்ந்திருக்கிறேனா? அப்படியே வளர்ந்திருந்தால் என்ன, நான் சொல்வதில் குற்றம் இருந்தால் திருத்திக் கொள்கிறேன். (கருத்தைவிடுத்து வேறு போக்கில் பேசக்கூடாது என்ற தற்கட்டுப்பாட்டை மீறிய என் உரையை வெட்டியுள்ளேன்.) மாற்றுப் பயன்பாடுகளை மாற்றுவழிகளாகவும் முதல் பத்தியில் குறிப்பிட்டும் எழுதினால் தேடுபவர்கள் திகைக்கப் போவதில்லை. இதைப் பற்றிப் பலமுறை உரையாடியுள்ளோம். அடுத்து நீங்களே சடுதிமாற்றம் படிவளர்ச்சியின் ஒரு காரணிதான் என்கிறீர்கள். அதுமட்டுமல்ல அது நம் பார்வையில்தான் சடுதியான மாற்றம், படிவளர்ச்சியின் காலக்கோட்டில் அல்ல என மேலே நான் கூறியுள்ளதையும் கவனியுங்கள். ஒரு பேச்சுக்கு சடுதியைக் காட்ட வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும் பரிணாமம் எனுஞ்சொல் அதைக்காட்டுகிறதா? பரிணாமம் என்கிற சொல்லின் பொருள் விளைவு என்பதாகும். இதில் பொருளின் அடிப்படையில் என்ன உயர்வு இருக்கிறது. அதேவேளை கூர்ப்பு என்கிற சொல் எவ்வளவு அழுத்தமான பொருள் தருகிறது. அண்மைய அதாவது புதிய தார்வினியக் கோட்பாடுகள் வருமுன்னரே, மெண்டலின் ஆய்வுகளுக்கும் பேட்ஃசின் ஆய்வுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கூர்தல் என்ற அடிப்படையில் கூர்ப்பு என வழங்கி அதை உள்ளது சிறந்து மிகுதல் என விளக்கியிருக்கிறார்கள் என்றால் அதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்? தவிர அது இலங்கைப் பாடநூல்களில் பயன்படுத்துவதாகவும் மயூரநாதன் தெரிவித்திருந்தார். அதனால் பயன்படுத்த வேண்டும் எனவில்லை, அந்தச்சொல் புத்தாக்கம் கூட இல்லை என்பதற்காகச் சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:36, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
இது பன்னாட்டவர் இயங்குமிடம் என்பதால், எனது கல்வியிடத்தைக் குறிப்பிட்டது தவறா?. இது போல பலர் தெரிவித்தால், நம்மிடையே வட்டாரச்சொல்லறிவு வளரும் அல்லவா? //அண்டார்டிக்காவில் வளர்ந்திருக்கிறேனா?// நல்ல சுவையை என்னில் கூட்டியமைக்கு நன்றி.சுந்தர். கூர்ப்பு இலங்கை பயன்பாடு; பரிணாமம் தமிழகப் பயன்பாடு. அந்தந்த மாணவரிடையே, இவை இரண்டும் ஒன்றே. நான் புரிந்து கொண்டது சரிதானே?--≈ உழவன் ( கூறுக ) 13:48, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]
மேலே பொருள் பொருத்தம் பற்றிய என் கருத்துக்களை பற்றி ஏற்போ மறுப்போ எதுவும் சொல்லவில்லையே? இறுதியாக இது புத்தாக்கமல்ல என்பதற்காக (யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, அலுவல் ஏற்பு அடிப்படையிலோ, மாணவர் பயன்பாடு என்ற அடிப்படையிலோ அல்ல என) நான் குறிப்பிட்டிருந்த இலங்கைப் பாடநூல் செய்தியைக் காட்டி புரிந்து கொண்டது சரிதானே என்கிறீர்கள். நான் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 14:13, 21 சூலை 2013 (UTC) பி.கு. அண்மைய மாற்றங்களில் என் விருப்பத்தேர்வினாலோ வேறு காரணத்தினாலோ ஒரு பக்கத்தின் அனைத்து அண்மைய தொகுப்புக்களையும் இணைத்து ஒரே வரியில் காட்டுகிறது. அதனால் தொகுப்புச் சுருக்கத்தைப் படிக்க முடிவதில்லை. அதனால், உரையாடலுக்குத் தொடர்புடைய கேள்விகளை தொகுப்பிலேயே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். சுந்தர், அப்ப பரிணாம வளர்ச்சி தவறா? என்பது போல ஒரு கேள்வியைத் தொகுப்புச்சுருக்கத்தில் இட்டிருந்தீர்கள். அதை நான் தற்செயலாகப் பக்க வரலாற்றில்தான் பார்க்க நேர்ந்தது. நான் கவனிக்க வேண்டிய செய்தி என்றால் தொகுப்பிலேயே இடுவது நல்லது.[பதிலளி]