நோக்கியா 808 ப்யூர்வியூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தயாரிப்பாளர் | நோக்கியா |
|---|---|
| கேமரா | 41 Mpx (1/1.2") உணரி Carl Zeiss AG |
| இரண்டாம் நிலை கேமரா | 0.3 Mpx; 480p 30 fps |
| இயங்கு தளம் | சிம்பியன் இயங்குதளம் |
| CPU | 1.3 GHz எ.ஆர்.எம்.11 |
| நினைவகம் | 512 MB RAM |
| நினைவக அட்டை | மைக்ரோ எஸ்.டி. கார்டு (32 ஜிகா பைட்டுகள் வரை) |
| பதிவகம் | 16 ஜிகா பைட்டுகள் |
| தொடர்பாற்றல் | புளுடூத் 3.0 வை-ஃபை 802.11 b/g/n DLNA மைக்ரோ எச்.டி.எம்.ஐ மைக்ரோ யு.எசு.பி யு.எசு.பி பாதுகாக்கப்பட்ட என்.எப்.சி. 3.5 மி.மீ. தொலைக்காட்சியில் இணைக்கும் வசதியுடன் பன்பலை ஜி.பி.எஸ் உடன் எ-ஜி.பி.எஸ் |
| மின்கலன் | BV-4D 1400 mAh லித்தியம் அயர்ன் |
| அளவு | 123.9 x 60.2 x 13.9 மி.மீ. |
| எடை | 169 கி. |
நோக்கியா 808 ப்யூர்வியூ என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசி 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள், மொபைல் வேர்ல்டு காங்கிரசு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கைப்பேசி 41 மெகாபிக்சல் ஒளிப்படக்கருவியைக் கொண்ட முதல் கைப்பேசி ஆகும்[1]. மேலும் இந்த வகை தொலைப்பேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன. தற்போது இந்த வகை கைப்பேசியின் மதிப்பு 835 அமெரிக்க டாலர் ஆகும்.