நேஷர் ராம்லா ஹோமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேஷர் ராம்லா ஹோமோ புதைபடிவங்கள்- மண்டையோடு மற்றும் கீழ் தாடை

நேஷர் ராம்லா ஹோமோ (Nesher Ramla Homo) குழு என்பது நவீன இஸ்ரேலில் நடு ப்ளீஸ்டோசீனின் காலத்தில் வாழ்ந்த தொன்மையான மனித இனங்களில் அற்றுவிட்ட இன மக்கள் ஆவர். 2010 ஆம் ஆண்டில், நேஷர் ராம்லாவில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் கருவித் தொழிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், முதல் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து நேஷர் ராம்லா ஹோமோ என்னும் ஆதிமனித இனம் அடையாளம் காணப்பட்டது.

வகைபிரித்தல்[தொகு]

அருகில் உள்ள சீமைக்காரை தொழிற்சாலைக்காக சுண்ணாம்புக் கரடில் அகழ்ந்ததைத் தொடர்ந்து நேஷர் ராம்லா தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தளம் 2010–2011 க்கு இடையில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் அகழப்பட்டது. டி. ஃப்ரீசெம், ஒய். ஜைட்னர், ஆர். ஷாஹாக்-கிராஸ் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட நடு பழைய கற்காலத்திலிருந்து தொல்பொருள் கிடைத்தன. [1] அகழ்வாராய்ச்சியின் போது லித்திக் தொழிற்துறையின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தளத்தில் கிடைத்த பொருட்களில் செதிற்கல் கருவிகள் போன்றவை கண்டெடுக்கபட்டன. [2]

2021 ஆம் ஆண்டில் மானுடவியலாளர் இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் ஒரு மண்டையோட்டின் ஐந்து துண்டுகள், கிட்டத்தட்ட முழுமையான ஒரு கீழ் தாடைத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சியவை நடு ப்ளீஸ்டோசீனின் 140-120 கியா வரை காலம் பழமையானதாக கணிக்கப்பட்டன.

நியண்டர்டால்தால் மனிதர் கிழக்காசியாவில் வாழ்ந்த காலத்திலேயே இங்கு வாழ்ந்த தனி மக்கள் இனத்தில் எஞ்சி பிழைத்தவர்களாக இருக்கலாம் என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் ஊகித்தார். [3] ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிலிப் ரைட்மைர் இந்த கண்டுபிடிப்புகளுடன் உடன்படவில்லை. அதற்கு பதிலாக, மண்டை ஓடு ஆரம்பகால நியண்டர்டால்களில் வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கருதினார். நியாண்டர் மக்கள் ஐரோப்பாவிலிருந்து இப்பகுதிக்கு குடிபெயர்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ரைட்மைர் விவாதித்தார். [4]

பொருட்கள்[தொகு]

நேஷர் ராம்லாவில் கண்டெடுக்கப்பட்ட லெவல்லோயிஸ் கல்லாயிதம்

6,000 க்கும் மேற்பட்ட கற் கருவிகள் இந்த இடத்தில் அகழப்பட்டன. நேஷெர்தாம் மற்றும் ஹோமோ சேபியன்களிடையே முன்னர் அறியப்பட்ட கல் கருவி உற்பத்தி தொழில்நுட்பங்களில் நேஷர் ராம்லா ஹோமோ மக்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஜெய்ட்னர் தலைமையிலான குழு இந்த கருவித் தொழிலானது நேஷர் ராம்லா மக்களுக்கும் ஹோமோ சேபியன்ஸ் மக்களுக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகளுக்கு சான்றாக இருப்பதாக விளக்கியது. [5]

குறிப்புகள்[தொகு]

 

  1. Friesem, David E.; Zaidner, Yossi; Shahack-Gross, Ruth (8 May 2014). "Formation processes and combustion features at the lower layers of the Middle Palaeolithic open-air site of Nesher Ramla, Israel" (in en). Quaternary International 331: 128–138. doi:10.1016/j.quaint.2013.03.023. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-4553. இணையக் கணினி நூலக மையம்:67285037. Bibcode: 2014QuInt.331..128F. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1040618213001560. 
  2. Zaidner, Yossi; Centi, Laura; Prevost, Marion; Shemer, Maayan; Varoner, Oz (2018), Nishiaki, Yoshihiro; Akazawa, Takeru (eds.), "An Open-Air Site at Nesher Ramla, Israel, and New Insights into Levantine Middle Paleolithic Technology and Site Use", The Middle and Upper Paleolithic Archeology of the Levant and Beyond (in ஆங்கிலம்), Singapore: Springer Singapore, pp. 11–33, doi:10.1007/978-981-10-6826-3_2, ISBN 978-981-10-6825-6, OCLC 1203992920
  3. Hershkovitz, Israel; May, Hila; Sarig, Rachel; Pokhojaev, Ariel; Grimaud-Hervé, Dominique; Bruner, Emiliano; Fornai, Cinzia; Quam, Rolf et al. (25 June 2021). "A Middle Pleistocene Homo from Nesher Ramla, Israel" (in en). Science 372 (6549): 1424–1428. doi:10.1126/science.abh3169. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. இணையக் கணினி நூலக மையம்:1644869. https://www.sciencemag.org/lookup/doi/10.1126/science.abh3169. 
  4. Jones, Nicola (25 June 2021). "Mysterious skull fossils expand human family tree — but questions remain" (in en). Nature 595 (7865): 20. doi:10.1038/d41586-021-01738-w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. இணையக் கணினி நூலக மையம்:759932692. பப்மெட்:34172962. http://www.nature.com/articles/d41586-021-01738-w. 
  5. Zaidner, Yossi; Centi, Laura; Prévost, Marion; Mercier, Norbert; Falguères, Christophe; Guérin, Gilles; Valladas, Hélène; Richard, Maïlys et al. (25 June 2021). "Middle Pleistocene Homo behavior and culture at 140,000 to 120,000 years ago and interactions with Homo sapiens" (in en). Science 372 (6549): 1429–1433. doi:10.1126/science.abh3020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. இணையக் கணினி நூலக மையம்:1644869. https://www.sciencemag.org/lookup/doi/10.1126/science.abh3020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேஷர்_ராம்லா_ஹோமோ&oldid=3192227" இலிருந்து மீள்விக்கப்பட்டது