நூறு சிந்தனைப் பள்ளிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூறு சிந்தனைப் பள்ளிகள் (The Hundred Schools of Thought) என்பது கிமு 770 - 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது. இக் காலப் பகுதி போர்களையும் பல்வேறு சமூக அரசியல் நெருக்கடிகளையும் கொண்டிருந்தது எனினும், மெய்யியல் சிந்தனை நோக்கில் சீனாவின் பொற்காலப் பகுதியாக கருதப்படுகிறது. சீனாவின் சிறந்த மெய்யியலாளர்களான கன்பூசியசு, லா ஒசி, மோகி போன்றோர் இக் காலப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.