நான் கடவுள் இல்லை
நான் கடவுள் இல்லை | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | சித்தார்த் விபின் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மகேஷ் கே. தேவ் |
படத்தொகுப்பு | பிரபாகர் |
கலையகம் | ஸ்டார் மேக்கர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 3, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் கடவுள் இல்லை(Naan Kadavul Illai) 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் விழிப்புணர்வு அதிரடித் திரைப்படமாகும்.எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தனர். பகீரா (2023) மற்றும் அயோத்தி (2023) திரைப்பட வெளியீட்டின் போது 2023 மார்ச் 3 அன்று வெளியிடப்பட்டது. [1]
நடிகர்கள்[தொகு]
- செந்தூரனாக சமுத்திரக்கனி
- லீனாவாக சாக்சி அகர்வால்
- வீரப்பனாக சரவணன்
- எஸ். ஏ. சந்திரசேகர்
- இனியா
- யுவன் மயில்சாமி
- இமான் அண்ணாச்சி
- டயானா ஸ்ரீ
- ரோகினி
- செல்வ குமார்
தயாரிப்பு[தொகு]
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி (2019) திரைப்படம் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்ற ஊடக அறிக்கைகளை அடுத்து, இயக்குநராகத் தொடர்ந்தார். அக்டோபர் 2020 இல் படத்தின் தயாரிப்பைத் தொடங்கியது.[2] படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டிற்குள் நிறைவடைந்தது, செப்டம்பர் 2021 இல் விளம்பரங்கள் தொடங்கின.[3] இப்படத்தில் தனது அதிரடி தொடர்பான கதாபாத்திரத்தில், சாக்சி அகர்வால் கனல் கண்ணனிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். [4]
ஒலிப்பதிவு[தொகு]
இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். [5] [6]
- கண்ணே என் கண்மணியே – சைந்தவி, எஸ்.ஏ.சந்திரசேகர்
- ஓஹோ வில்லன் – எம்சி ரூட்டு
வரவேற்பு[தொகு]
இப்படம் 2023 பெப்ரவரி 3 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "இந்த பொறுப்பற்ற பழிவாங்கும் நாடகத்தில் சராசரித்தன்மை செழித்து வளர்கிறது" என்று எழுதினார். மேலும் இத்திரைப்படம் "எஸ். ஏ. சியின், தன் விருப்பமான, நீண்ட, ஏற்றுக்கொள்ளப்படாத மறுபரிசீலனை" என்று எழுதினார்.[7] தினத்தந்தியின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார். [8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Samuthirakani's Naan Kadavul Illai gets a release date". 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
- ↑ "SA Chandrasekar's next has Samuthirakani and Sakshi Agarwal in the lead". 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
- ↑ "First look of Naan Kadavul Illai out". 7 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
- ↑ "Sakshi Aggarwal on performing action scenes for 'Naan Kadavul Illai' – Exclusive". 17 February 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sakshi-aggarwal-on-performing-action-scenes-for-naan-kadavul-illai-exclusive/articleshow/98011974.cms.
- ↑ "Naan Kadavul Illai". பார்க்கப்பட்ட நாள் 19 February 2023.
- ↑ "Naan Kadavul Illai (Original Motion Picture Soundtrack) – EP". பார்க்கப்பட்ட நாள் 19 February 2023.
- ↑ "Naan Kadavul Illai Movie Review: Mediocrity thrives in this reckless revenge drama". 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
- ↑ "சினிமா விமர்சனம் : நான் கடவுள் இல்லை". 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.