நல்லதே நடக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லதே நடக்கும்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎம். ஜி. விகாஷ்
எம். ஜி. வினோத்
கதைதங்கபாலன் (வசனம்)
திரைக்கதைகே. சங்கர்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
வி. ஜெயபால்
கலையகம்பாராமௌன்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடுசூன் 30, 1993 (1993-06-30)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லதே நடக்கும் 1993 ஆம் ஆண்டு சரவணன், காவேரி மற்றும் ரோகிணி ஆகியோர் நடிப்பில், கே. சங்கர் இயக்கத்தில், எம். ஜி. விகாஷ் மற்றும் எம். ஜி. வினோத் தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]

கதைச்சுருக்கம்[தொகு]

வழக்கறிஞரான பிரகாஷ் (சரவணன்) தன் தாயுடன் வசிக்கிறான். செய்யாத குற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனையால் நிரபராதியான அவன் தந்தை இறந்ததால், தன் உதவியை நாடிவரும் அப்பாவி மக்களுக்கு வழக்கறிஞராகத் தன்னால் இயன்ற வழக்கு தொடர்பான உதவிகளை செய்கிறான்.

திருவிழாவில் கிராமத்தின் தலைவர் மேகநாதனைக் (சாத்தப்பன் நந்தகுமார்) கொலை செய்ததாக செங்கோடன் குற்றம் சாட்டப்படுகிறான். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் முதல் நாள் அன்று செங்கோடன் தான் நிரபராதி என்று அனைவர் முன்னிலையிலும் மன்றாடுகிறான். செங்கோடன்தான் குற்றவாளி என்று பிரகாஷ் முதலில் எண்ணினாலும், செங்கோடனின் தங்கையும் பிரகாஷின் காதலியுமான ஜீவா (காவேரி) பிரகாஷை சந்தித்து அவளது அண்ணன் நிரபராதி என்று புரியவைக்கிறாள். செங்கோடனைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பிரகாஷ் அதற்காக பல முயற்சிகள் செய்தாலும் இறுதியில் தோல்வி அடைகிறான். செங்கோடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

செங்கோடனைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற ஆதாரங்களைத் தேடி செங்கோடனின் கிராமத்திற்குச் செல்கிறான். அவன் காதலி ஜீவா தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். அங்கு வள்ளியம்மாள் (மனோரமா) வீட்டில் தங்குகிறான். வள்ளியம்மாள் மகள் ஜெயா (ரோகிணி) அவனை விரும்புகிறாள். மேகநாதனின் சகோதரன் விக்ரமன் (நெப்போலியன்) மற்றும் மேகநாதனின் மனைவி ரமாதேவி (சில்க் ஸ்மிதா) ஆகியோர் மீது சந்தேகப்படுகிறான். செங்கோடன் காப்பாற்றப்பட்டானா? பிரகாஷ் வழக்கில் வெற்றி பெற்றானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் வாலி.[4][5]

வ.எண் பாடல் பாடகர்(கள்) காலநீளம்
1 என் சுவாமி ஐயப்பன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:50
2 மரங்கொத்தி எஸ். ஜானகி 4:42
3 நல்ல ராத்திரி எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:07
4 ஒண்ணு ரெண்டு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:06
5 வா தலைவா எஸ். ஜானகி 5:03

மேற்கோள்கள்[தொகு]

  1. "நல்லதே நடக்கும்".
  2. "நல்லதே நடக்கும்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  3. "நல்லதே நடக்கும்". Archived from the original on 2004-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "நல்லதே நடக்கும் பாடல்கள்".
  5. "நல்லதே நடக்கும் பாடல்கள்".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதே_நடக்கும்&oldid=3660302" இலிருந்து மீள்விக்கப்பட்டது