நந்தூர் மத்மேசுவர் பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தூர் மத்மேசுவர் பறவைகள் சரணாலயம் (Nandur Madhmeshwar Bird Sanctuary) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், நிப்ஹாட் தெகசில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

நந்தூர் மத்மேசுவர் பறவைகள் சரணாலயம் மகாராட்டிர மாநிலம் மாவட்டம், நிப்ஹாட் தெகசில் அமைந்துள்ளது. இது மகராட்டிராவின் பரத்பூரில் என அழைக்கப்படுகிறது.[1] இது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் உள்ள முதல் ராம்சார் தளம் இதுவாகும்.[2] நந்தூர் மாதமேஸ்வரில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கல் தடுப்பு ஒன்று 1907-13ல் கட்டப்பட்டது.[3] நந்தூர் மத்மேசுவர் ஏரியில் நீரின் அளவு சீராக இல்லாமல் மாறுபடக்கூடியது. இந்த ஏரியின் அமைவு உயிரியல் பன்முகத்தன்மைக்கு வளமான சூழலை உருவாக்கி உள்ளது.

தாவரம்[தொகு]

சுமார் 460 தாவர சிற்றினங்கள் இப்பகுதியில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 80 இனங்கள் நீர் வாழத்தாவரங்களாகும். புளி, வேம்பு, நாவல், விலாயதி, மஹாரூக், பங்காரா, மா, யூகலிப்டசு போன்ற பல வகையான தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. மேலும் நீர்வாழ் தாவர இனங்களும் இங்கு உள்ளன.[4][5]

விலங்குகள்[தொகு]

இந்த பறவைகள் சரணாலயத்தில் சுமார் 230 பறவையினங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 80 பறவையினங்கள் வலசைப் போகும் பறவைகள் வகையின. இந்த சரணாலயத்தில் காணப்படும் புலம் பெயர்ந்த பறவைகள் வெள்ளை நாரை, அன்றில், கூழைக்கிடா, துடுப்பு வாயன், பூநாரை, வாது, சிவப்புதாரா, ஊசிவால் வாத்து, காடு வாத்து, மூக்கன், முதலியன.[6]

கேலரி[தொகு]

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்[தொகு]

ஈரநிலங்களுக்கான சர்வதேச ராம்சார் மாநாடு நாசிக் மாவட்டத்தின் நிபாத் தஹ்சில் உள்ள நந்தூர் மாதமேஸ்வர் ஈரநிலத்தை ராம்சர் ஈரநிலமாக அறிவித்துள்ளது. இது பிப்ரவரி 2 ம் தேதி சர்வதேச ஈரநில தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜனவரி 27 அன்று ராம்சார் தளங்களாக மாநாட்டால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஈரநிலமாகும். “நந்தூர் மாதமேஸ்வர் ஈரநிலம் நந்தூர் மாதமேஸ்வர் அணையின் ஆழமற்ற உப்பங்கடல்களால் உருவாக்கப்பட்டது, இது மகாராஷ்டிராவின் பாரத்பூர் என்று அழைக்கப்படுகிறது. இது 1986 இல் உருவாக்கப்பட்ட 100 சதுர கி.மீ நந்தூர் மாதமேஸ்வர் சரணாலயத்தில் அமைந்துள்ளது ”என்று வன (வனவிலங்கு) முதன்மை தலைமை பாதுகாவலர் நிதின் ககோட்கர் கூறினார். [7]

அணுகல்[தொகு]

நந்தூர் மாத்மேசுவர் பறவைகள் சரணாலயத்தின் அருகில் உள்ள வானூர்தி நிலையம் அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயத்திலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் நிப்ஹாடில் உள்ளது. இது மும்பை புசாவல் தொடருந்து வழித்தடத்தில் சரணாலயத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிப்ஹாடு, நாசிக், சினார் ஆகிய பகுதியிலிருந்து சாலை வழியாக எளிதில் பயணிக்கலாம்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://nandurmadhmeshwar.com/ பரணிடப்பட்டது 2018-08-11 at the வந்தவழி இயந்திரம் Bharatpura of Maharashtra
  2. https://indianexpress.com/article/india/nandur-madhmeshwar-wetland-becomes-maharashtras-first-ramsar-sites-6241373/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
  5. http://m.timesofindia.com/city/nashik/Flamingos-Indian-coursers-flock-Nandur-Madhmeshwar-sanctuary/articleshow/52210790.cms
  6. https://nashik.com/nandur-madhmeshwar-bird-sanctuary/
  7. https://indianexpress.com/article/india/nandur-madhmeshwar-wetland-becomes-maharashtras-first-ramsar-sites-6241373/