த சாத்தானிக் வெர்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த சாத்தானிக் வெர்சஸ்
1988 Salman Rushdie The Satanic Verses.jpg
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர் (கள்) சல்மான் ருஷ்டி
நாடு ஐக்கிய இராச்சியம்
மொழி ஆங்கிலம்
பாணி மாய யதார்த்தவாதம், புதினம்
பதிப்பாளர் வைக்கிங் பிரஸ்
பதிப்புத் திகதி 1988
ஊடக வகை அச்சு (வன்னட்டை மற்றும் மென்னட்டை)
பக்கங்கள் 547 பக்.
ஐஸ்பிஎன் சுட்டெண் 0670825379
OCLC 18558869
முன் பாகங்கள் ஷேம்
பின் பாகங்கள் ஹரூன் அன்ட் த சீ ஆஃப் ஸ்டோரீஸ்

த சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நான்காவது புதினமாகும். இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதம்|மாய யதார்த்தவாதத்தை கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய குரானியக் கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "சாத்தானிக் வெர்சஸ்" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.[1] இந்த சாத்தானிக் வெர்சசை கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1]

ஐக்கிய இராச்சியத்தில் இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு விட்பிரெட் பரிசைப் பெற்றது.[2] இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.

கூடுதல் படிப்புக்கு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 John D. Erickson (1998). Islam and Postcolonial Narrative. Cambridge, UK: Cambridge University Press. 
  2. Ian Richard Netton (1996). Text and Trauma: An East-West Primer. Richmond, UK: Routledge Curzon. 

வெளியிணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=த_சாத்தானிக்_வெர்சஸ்&oldid=1723001" இருந்து மீள்விக்கப்பட்டது