தே. வெ. இராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1957இல் தே. வெ. இராவ்

தேவுலப்பள்ளி வெங்கடேசுவர ராவ் (Devulapalli Venkateswara Rao) (1917-1984) ஒரு இந்திய அரசியல்வாதியாவார்.

சொந்த்ஃஅ வாழ்க்கை[தொகு]

இவர், வாரங்கல் மாவட்டம், இங்கூர்த்தி கிராமத்தில், 1917 சூன் 1 அன்று, தேவுலப்பள்ளி வரத ராவின் மகனாகப் பிறந்தார். [1] [2] இவரது குடும்பத்தினர் நல்கொண்டா மாவட்டத்தின் சூர்யாபேட்டை வட்டத்தின் பந்தமீதி சண்டுபட்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

கிளர்ச்சி[தொகு]

கம்மத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோது, ஆந்திர மகாசபாவின் 3வது மாநாட்டில் பங்கேற்றார். [1] ஐதராபாத் அரசாங்கத்தின் நிசமுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து மாணவர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். [2] உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவராக இருந்தபோது, ஐதராபாத் மாநிலத்தில் 'வந்தே மாதரம்' மாணவர் இயக்கத்தின் அமைப்பாளராக இருந்தார். போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக இவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் 1938 இல் ஜபல்பூர் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிக்க முடிந்தது. இந்த காலகட்டத்தில் இவர் மார்க்சிய இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டார். தனது கிராமத்திற்குத் திரும்பிய பின்னர், மே 1939 இல் இரங்கநாயக்கம்மா என்பவரை மணந்தார்.

பொதுவுடைமை இயக்கம்[தொகு]

இவர், 1939 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து கொண்டார். [1] ஆந்திர மகாசபாவின் நல்கொண்டா மாவட்டக் குழுவின் தலைவராக பணியாற்றினார். மேலும் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். [2] தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் முக்கிய அமைப்பாளராக இருந்த இவர் எட்டு ஆண்டுகள் மறைந்து (1953 வரை) வாழ்ந்தார். மா சே துங்கின் கீழ் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு புரட்சிகர வரியை இந்தியாவில் முதல்முறையாக கோடிட்டுக் காட்டிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாகாண செயலகத்தின் 1948 ஆந்திர ஆய்வறிக்கையின் வரைவில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.ப் 1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா போராட்டத்தின் ஆயுதங்களுடன் சரணடைவது ஒரு பெரிய துரோகம் என்று வாதிட்டார். [3]

இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நல்கொண்டா மாவட்டக் குழுவின் செயலாளராகவும், தெலுங்கானாவின் செயலக உறுப்பினராகவும் (பிப்ரவரி 1952 இல் உருவாக்கப்பட்டது), அதன் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார். [2] [4] 1964இல் ஏற்பட்ட கட்சியின் பிளவுக்கு முன்னர் அதன் இளைய உறுப்பினராக இருந்தார். [1] தெலுங்கானா அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தலில் நல்கொண்டா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

புதிய அமைப்பு[தொகு]

சூன் 1968 இல் ராவ், டி. நாகி ரெட்டி, சந்திரா புல்லா ரெட்டி மற்றும் கொல்லா வெங்கையா ஆகியோருடன் பொதுவுடைமை புரட்சியாளர்களின் ஆந்திர மாநில ஒருங்கிணைப்புக் குழுவை (ஏபிசிசிஆர்) நிறுவினார். [5] ஏப்ரல் 1975இல் இவரும், டி. நாகி ரெட்டியும் இந்திய பொதுவுடைமை புரட்சியாளர்களின் ஒற்றுமை மையத்தை (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (யு.சி.சி.ஆர்.ஐ (எம்.எல்)) நிறுவினர். [1]

நூல்கள்[தொகு]

1974 ஆம் ஆண்டில் இவரது தெலுங்கானா ஆயுதப் போராட்டம் மற்றும் இந்தியப் புரட்சியின் பாதை என்ற நூல் ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டது. இது, பி.சுந்தரய்யாவின் தெலுங்கானா மக்கள் போராட்டம் மற்றும் அதன் பாடங்கள் பற்றிய மதிப்பாய்வாகும். 1970 களின் பிற்பகுதியில், இவர் தி புரோலட்டேரியன் லைன் நிறுவனத்தின் நிறுவன ஆசிரியரானார். தெலுங்கானாவின் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் வரலாறு (1946-51) தொகுதி -1, தெலுங்கில் இவரது மரணத்திற்குப் பின் 1988 இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் தெலுங்கானா போராட்டத்தின் வரலாற்றை 1948 காவல் நடவடிக்கை வரை உள்ளடக்கியது.

இறப்பு[தொகு]

இவர், சூன் 12, 1984 இல் இறந்தார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 countercurrents.org. Veteran Communist Revolutionary DV Rao Remembered
  2. 2.0 2.1 2.2 2.3 Lok Sabha. RAO, SHRI DEVULAPALLI VENKATESWARA
  3. Puccalapalli Sundarayya; Harindranath Chattopadhyaya (1972). Telangana People's Struggle and Its Lessons. Foundation Books. p. 323-324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7596-316-0.
  4. Puccalapalli Sundarayya; Harindranath Chattopadhyaya (1972). Telangana People's Struggle and Its Lessons. Foundation Books. p. 323-324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7596-316-0.Puccalapalli Sundarayya; Harindranath Chattopadhyaya (1972). Telangana People's Struggle and Its Lessons. Foundation Books. p. 323-324. ISBN 978-81-7596-316-0.
  5. Leslie J Calman. Protest In Democratic India: Authority's Response To Challenge. Taylor & Francis. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-030844-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._வெ._இராவ்&oldid=3099470" இலிருந்து மீள்விக்கப்பட்டது