தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)
தெய்வத்திருமகள் | |
---|---|
விளம்பரச் சுவரொட்டி | |
இயக்கம் | விஜய் |
தயாரிப்பு | எம். சிந்தாமணி ரோனி ஸ்க்ரிவாலா |
கதை | விஜய் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | ஆண்டனி |
கலையகம் | சிறீ ராஜலட்சுமி மீடியாஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஜூலை 15, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வத்திருமகள் (Deiva Thirumagal) 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது இயக்குநர் விஜயால் எழுதி இயக்கப்பட்டது. இப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, அமலா பால், நாசர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதை
[தொகு]மனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மனைவி குழந்தை பிறப்பிற்குப் பின் இறந்து போக, குழந்தையை விக்ரமே வளர்க்கிறார். இதனை அறிந்த அவரது மனைவியின் குடும்பத்தார் அவரிடமிருந்து குழந்தையைப் பிரிக்கின்றனர். பின்னர், நீதிமன்றம் மூலம் வாதாடி விக்ரம் குழந்தையைப் பெற்றாரா இல்லையா என்பதைச் சொல்வதன் மூலம் படம் முடிகிறது. இடையே அனுஷ்கா அவரது தந்தை ஒய். ஜி. மகேந்திரனுடனான சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன.
குழு
[தொகு]- கிருஷ்ணாவாக விக்ரம்
- வழக்குரைஞர் அனுராதா ரகுநாதனாக அனுஷ்கா
- விக்ரம் மனைவியின் தங்கை சுவேதா சற்குணமாக அமலா பால்
- விக்ரமின் குழந்தை நிலாவாக சாரா
- வழக்குரைஞர் பாஷ்யமாக நாசர்
- வினோத்தாக சந்தானம்
- மூர்த்தியாக எம். எஸ். பாஸ்கர்
- ராஜேந்திரனாக சச்சின் கெதேகார்
- ரகுநாதனாக ஒய். ஜி. மகேந்திரன்
திரையரங்கில்
[தொகு]சென்னையில் முதல் மூன்று நாளில் இத்திரைப்படம் அரங்கம் நிரம்பிய காட்சிகளுடன் ₹ 80 லட்சம் வசூலித்தது.[1] முதல் வார இறுதியில் 90% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 2.53 கோடி ரூபாய்கள் வசூலித்தது.[2] ஆறு வார இறுதியில் 85% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 7.01 கோடி ரூபாய்கள் வசூலித்திருந்தது.[3]
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chennai Box-Office- July 15 to 17". சிஃபி. 2011-07-19. Archived from the original on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2011-07-21.
- ↑ "Deiva Thirumagal - Behindwoods.com - Tamil Top Ten Movies - Kanchana Deiva Thirumagal Theneer Viduthi Venghai 180 Pillaiyar Nootrenbadu Theru Kadaisi Veedu Udhayan Avan Ivan A". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
- ↑ - Behindwoods.com - Ranking based on Chennai Box Office Collections from August 26th 2011 to August 28th 2011